*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 3 June
by : Eddy Joel Silsbee
விசுவாசத்தை துவங்கியவரான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
விசுவாசி என்று மார்தட்டிக் கொள்பவர்கள் விசுவாசத்திற்கும் அடிமைத்தனத்திற்க்கும் வித்தியாசம் தெரியாமல் மறுபடியும் தங்களை அடிமையின் நுகத்தடியின் கீழே கழுத்தை கொடுத்துக் கொள்கிறார்கள்.
கிறிஸ்தவனான பின்பும்,
கிறிஸ்துவின் நிமித்தம் வந்த விடுதலை என்ன என்று உணராதபடிக்கு நியாயப்பிரமானத்தின் கீழே,
சாபதிற்குள்ளாக வாழ விரும்பக் கூடாது.
நியாயபிரமாணம் மோசேயின் மூலமாக,
“அனைவருக்கும் அல்ல”,
இஸ்ரவேலர்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டது. உபா. 5:1-5
கிறிஸ்துவின் சிலுவை மரணத்தோடு இஸ்ரவேலருக்குமே அந்த சட்டம் காலாவதியாகி போனது !! எரே. 31:31
நியாயப்பிரமானத்தின் முடிவாக இருக்கிறார் இயேசு கிறிஸ்து.
சிலுவையில் அதை ஆணியால் அடித்து முடித்து விட்டார். ரோ 10:4
நியாயபிரமாணம் தனக்கு வேண்டும் என்று விரும்புகிறவர்கள், சாபத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள் என்று வேதம் சொல்கிறது. கலா. 5:4, யாக். 2:10
கேட்பதை வேதத்துடன் ஒப்பிடாமல்,
வயதானவர், மூத்த ஊழியர், பிரபலமான ஊழியர் என்ற முகதாட்சணியம் பார்த்து,
அவர் சொல்வது தான் கிறிஸ்தவம் என்று நம்பிவிடுவதால் ஏற்படும் இக்கால உபதேச குழறுபடிகளும் பிரிவினைகளும்.
வேதத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.
கிறிஸ்தவத்தில், அதாவது புதிய ஏற்பாட்டு சத்தியத்தில் சொல்லப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.
தாவீதோ மோசேயோ அல்ல,
அப்போஸ்தலர்கள் அதை செய்தார்களா அல்லது அங்கீகரித்தார்களா என்பதை வேதத்தில் ஒப்பிட்டுப் பார்த்து ஊர்ஜீதப்படுத்திக்கொள்ளுங்கள்.
அவைகளையே நாம் பின்பற்றவேண்டும்.
இல்லையென்றால், இளையவரோ மூத்தவரோ, எவர் சொன்னாலும் அது வேதத்திற்கு முரண் தான்.
ஆதார வசனக்குறிப்புகள் : மத். 28:20, அப். 1:3, அப். 2:42, அப். 20:20-21, 1கொரி. 14:37, 1தெச. 4:1-2
உண்மை கிறிஸ்தவனாக சந்தோஷமும் இரட்சிப்பும் கிருபையும் நம்மில் நிலைத்திருக்க,
மனுஷனுக்கு அல்ல கிறிஸ்துவுகென்று வாழ்வோம்.
பூரண சமாதானமும் இரட்சிப்பும் தேவனுடைய பாதுகாவலும் நம்மை ஆட்கொள்ளும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
You-Tube : https://youtu.be/mEEFPKpgVLA

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக