வியாழன், 10 ஜூன், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 10 June

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 10 June

by : Eddy Joel Silsbee

 

புதிய நாளின் ஆனந்தத்தை நமக்கு தரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

முழு பட்டணத்திலும் 10 தேவனுடைய பிள்ளைகள் (நீதிமான்கள்) கூட இல்லாதபடியினாலே  சோதோம் கொமோரா அழிக்கப்பட்டு போனது - ஆதி. 18:32

 

நம் தேசங்கள்;

சுயநலத்திலும்,

பெருமை பேச்சுகளிலும்,

விபச்சாரத்திலும்,

விக்கிரக வழிபாட்டிலும்,

துன்மார்க்கத்திலும்,

சட்ட விரோதத்திலும்,

பொய் பரப்புரைகளிலும்,

தவறான பாதையில் வழி நடத்தும் தலைவர்களும்,

தவறு என்று அறிந்தும் குருட்டாட்டமாய் பின்தொடரும் கூட்டத்தினராலும்  நிரம்பி வருகிறது.

 

*எமோரியரின்* அக்கிரமம் மிகுதியாவது வரைக்கும் (நிறையும் வரைக்கும்);

*இஸ்ரவேல்* ஜனம் அடிமைத்தனத்தில் இருந்தது. (ஆதி. 15:16) 

 

எமோரியரின் அக்கிரமம் பூர்த்தியான போதோ முழு தேசமும் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட்டது.

 

எப்படி உப்பு சிறிதளவே போதுமானதோ, கிறிஸ்தவர்களாகிய நாமும் சிறிதளவு தான் இருக்கிறோம்.

 

தேசத்தில் நாம் உப்பாக இருக்கிறோம் (மத். 5:13)

 

மாயையை விட்டு,

பரவசத்தை விட்டு,

கற்பனைக் கதைகளை விட்டு,

பொய்யான தீர்க்கதரிசிகளின் போதனைகளை விட்டு,

தினமும் பரலோகத்திற்கு போய் வருபவர்களின் கதைகளில் இருந்து விடுபட்டு,

100க்கு 100 முழுமையாக வெளியாக்கப்பட்டு நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் தேவ வார்த்தையான வேதத்தையே மறந்து,

நேரடியாக ஆண்டவர் எனக்குச் சொன்னார் என்வர்களின் பொய்யான வார்த்தைகளுக்கு கீழ்படியாமல்,

 

வேதத்திற்கும் உண்மைக்கும் செவிசாய்க்கும்படியாக,

தேசம் மனம்திரும்பும்படியான ஒர் எச்சரிப்பாகவே இந்த கொள்ளை நோய் உலகம் முழுவதும் அனுமதிக்கப்பட்டது என்று நான் கருதுகிறேன்.

 

கிறிஸ்தவ மதம் தன் மாயையைவிட்டு கிறிஸ்தவ *மார்க்கத்திற்கு* திரும்பும்படி நம் முழங்கால்கள் முடங்கட்டும்.

 

டிவியை பார்த்து அல்ல,

தேவனிடத்தில் கண்ணீர் விடுவோம்.. மன்றாடுவோம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

https://youtu.be/mbJXZ5ISoiM

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக