*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 30 May 2021
by : Eddy Joel Silsbee
கரிசனையோடு நம்மை நடத்தும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
பல வருடமாக உபயோகப்படுத்தாமல்,
பொருட்படுத்தாமல்,
வீட்டிற்கு வெளியே அவசியமில்லாத பொருள் என்று விடப்பட்டதை,
எவரும் பயன்படுத்தவில்லை என்றும் வீணாய் இருக்கிறது தானே என்று அதை சரி செய்து உபயோகிக்க ஆரம்பித்தால்,
உரியவர் வந்து “*இது என்னுடையது*” என்று உரிமை கொண்டாடும் போது உரிமையாளரின் உரிமை என்ன என்பது நமக்குப் புரியும் !! .... ஆதி. 26:18-20
அப்போது,
தன்னுடைய முயற்சியின் சுய உரிமையை நிலைநாட்ட முயற்சிக்காமல், விட்டுக்கொடுத்தால் நேர்மையான ஆசீர்வாதம் நமக்கு இன்னும் தேடி வரும்..
பழையதைக் காட்டிலும், புதிய முயற்சியை இன்னும் அதிகமாய் தேவன் ஆசீர்வதிக்கிறவர்..
ரெகொபோத்தின் சம்பவம் அதுவே !! .. ஆதி. 26:22
ஒரு காரியத்தில் நாம் வெற்றிக் கண்டால்,
அன்று வரை நம்மை எதிர்த்தவர்களும்,
தொல்லை தந்தவர்களும்,
போராடினவர்களும்,
எதிரிகளும்,
நம்மைத் தேடி வந்து,
நம்மை பார்த்து,
தேவனை துதித்து,
நம்முடன் சேர்ந்து உட்கார்ந்து பந்தியிருக்க ஆசைப்படுவார்கள். ஆதி. 26:26-30
ஆகவே,
நம் உரிமை பறிபோய்விட்டதே என்றோ,
அல்லது வேறு எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சோர்ந்து போகாமல்,
உற்சாகத்துடன் இன்னும் உழைப்போம்.
தேவன் நமக்கு அதிக பெலத்தையும் ஜீவனையும் தந்திருக்கிறார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக