சனி, 29 மே, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 29 May 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 29 May 2021

by : Eddy Joel Silsbee

 

சர்வத்திற்கும் ஆண்டவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

தொழுகையில் கூடிவந்த நாளின் தேவச் செய்தியை கேட்டும்,

பாடல் பாடியும், முழுப்பகுதியையும் கடைசி ஜெபமும் முடிந்தவுடனே வெளியே ஓடிவிடக் கூடாதாம்.

 

ஆமென் சத்தம் கேட்டதும், வீட்டுக்கு ஓட்டம் பிடிப்பவர்கள் இதை கவனிக்கவேண்டும்.

 

கூடிவந்த மற்றவர்களின் குணாதிசயங்களை கவனிக்க வேண்டும் என்று வேதம் நமக்கு கற்பிக்கிறது.

 

சபைகூடி வரும் போது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய *மேலும் 2 பாடம்* உள்ளது..

 

நம்முடைய இருதயம் *அன்பில் இன்னும் வளரவும்*;

 

தேவைப்படுவோருக்கு உதவும்படியான *நற்கிரியைகளில் நாம் இன்னும் மேலோங்கவும்*;

 

கூடிவந்திருக்கும் *மற்றவர்களை கூர்ந்து கவனித்து வளரும்படி* எபிரேய புத்தகத்தின் ஆசிரியர் நமக்கு வலியுறுத்துகிறார்.

 

சபைக்கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் என்ற எபி. 10:25ம் வசனத்தை எவ்வளவுக்கதிகமாய் வலியுறுத்துகிறோமோ, அதேப்போல அதற்கு முந்தைய 24ம் வசனமும் அவசியம்.

 

*வசனங்கள்*: 

எபி. 10:24 மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;

 

எபி. 10:25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

 

ஆம்…

நாம் உண்டு, நம் வேலை உண்டு, என்ற நோக்கில் போனோம், வந்தோம் என்று இருந்தால் கிறிஸ்துவினுள் நாம் பெற வேண்டிய வளர்ச்சி குன்றிப்போக வாய்ப்புள்ளது.

 

தினம்தினம் கிறிஸ்துவிற்குள் இன்னும் அதிகமாய் வளரப் பிரயாசப்படுவோம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக