*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 24 May 2021
by : Eddy Joel Silsbee
தேவ குமாரனுடைய நாமத்தில் உங்களுக்கு இந்த *புதிய நாள் வாழ்த்துக்கள்*.
எவருடைய கால் கை (காக்கை) பிடிச்சாவது காரியத்தை சாதித்து விடலாம் நினைப்பதுண்டு.
யாரை தாஜா பண்ணினாலும், *ஆண்டவர் தான் அதை வாய்க்க பண்ணமுடியுமாம்*. எஸ்ரா 7:27-28; நெகே. 1:11;
வீட்டுக்குள் ஜெபித்தபோது,
வெளியே தனியறையில் மிகவும் பாதுகாப்பாக,
சிப்பாய்களால் காவல் செய்யப்பட்ட *சிறையே உடைந்தது* அப். 12:5..
செய்யும் ஜெபத்துடன்,
தானதர்மங்களும் சேர்ந்துக் செய்துக்கொண்டபோது *விண்ணப்பம் வானத்துக்கு எட்டினது* அப். 10:4.
கதவைப்பூட்டி,
வீட்டுக்குள்ளையே,
மண்டியிட்டு,
இரகசியமாய்,
ஜெபிக்கும் ஜெபத்தின் மூலம் வானத்தின் கதவை நம்மால் தட்ட முடியும் என்பதால்,
*நமக்கு பதில் கொடுக்கக் காத்திருக்கும் தேவனை உத்தமமாய் அணுகுவோம்*. மத். 6:6
அனைத்தும் தானாக வரும். சம்பந்தப்பட்டவர்களே, நம்மை தேடி வர வைப்பார் நம் ஆண்டவர். நீதி. 29:26, சங். 20:9, சங். 62:12
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக