#1102 - *பைபிளில் நிறைய இடங்களில் பிசாசு பற்றி எழுதி இருக்கிறது. அதில் நிறைய இடங்களில் இயேசுவை கண்டு பிசாசு ஓடினான் என்று கூறியுள்ளனர். ஆனால், மத். 4:1ன்படி இயேசு பிசாசினால் சோதிக்கபடுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்கு கொண்டுபோகப்பட்டார். இதன் மறைபொருள் என்ன பிரதர். இயேசுவும் பிசாசினால் சோதிக்கபடனுமா? ஏன்? மேலும், லூக் 22:31ன்படி பின்னும் கர்த்தர் சீமோனே, சீமோனே, இதோ, கோதுமைச் சுளகினால் படைக்கிறது போலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன் என்று வாசிக்கிறோம். கர்த்தர் சாத்தானிடம் வேண்டலாமா*?
*பதில்* : மனிதனால் 100% கடைபிடிக்க முடியாத நியாயபிரமாணத்தை தேவன் தங்களுக்கு கொடுத்துவிட்டதாக இஸ்ரவேலர் நினைத்தனர். எபி. 8:7, 7:18
அவைகள் மிகவும் பாரமுள்ளவைகள் என்று வருத்தப்பட்டனர். மத். 11:28
ஆனால், எந்த மனிதனாலும் 613 கட்டளைக்கும் உட்பட்டு குற்றமற்றவனாக வாழமுடியும் என்பதை வாழ்ந்துக் காட்டி அதை நிறைவேற்றும்படி இயேசு கிறிஸ்து நியாயபிரமாணத்திற்குட்பட்ட காலத்தில் பிறந்து அதை முடித்து வைத்தார். கலா. 4:4-5, ரோ. 10:4, மாற்கு 14:56, 59
எந்த மனிதனும் முழுவதுமாக தேவனுடைய கட்டளைக்குக் கீழ்படிந்து வாழமுடியும் என்று அவர் அப்படியாக வாழ்ந்து தன்னைப் பின்பற்றும்படியாக அடிச்சுவடுகளை நமக்கு விட்டுச்சென்றுள்ளார். 1பேதுரு 2:21
ஆகவே, ஒரு சாதாரண மனிதன் எவ்வாறாக சோதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதோ அவை அனைத்து வகையிலும் பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு தன்னில் இடங்கொடுத்தார் இயேசு கிறிஸ்து. மத். 4:1
ஆதாம் ஏவாளிற்கு ஏதேன் தோட்டமே இருந்தும், சகல வசதிகள் இருந்தும் தேவனுடைய வார்த்தையை மீறினர். இயேசுவோ வனாந்திரத்தில் 40 நாட்களும் (மாற்கு 1:13) சோதனைக்குட்படுத்தப்பட்டும் தேவனுடைய வார்த்தையில் நிலைநின்று நமக்கு மாதிரியை காண்பித்தார். ஆகவே, நாம் எப்படிப்பட்ட சோதனையினின்று ஜெயிக்கமுடியும் என்பதை வாழ்ந்துக் காட்டியுள்ளார்.
கர்த்தர் சாத்தானிடம் வேண்டலாமா என்ற உங்களது கேள்வியின் இரண்டாவது பகுதிக்கு பதில்: கர்த்தர் சாத்தானிடம் வேண்டினார் என்று நாம் அர்த்தங்கொள்வதல்ல !! வேதம் அப்படி பதியவும் இல்லை.
மூன்று முறை அவர் மறுதலிக்கப்போகிறார் என்பதை இயேசு அறிந்திருந்தார். லூக்கா 22:34.
பேதுருவின் விசுவாசம் (வாக்குறுதி) தோல்வியுற்றது. லூக்கா 22:33.
ஆனால் அவர் யூதாஸைப் போலவே வீழ்ச்சியடையவில்லை, விசுவாசதுரோகம் செய்யவில்லை, அல்லது தனது எஜமானரையும் அவருடைய காரணத்தையும் கைவிடவில்லை. மனந்திரும்பும்படியான வாய்ப்பை பெற்றார். மனங்கசந்து அழுதார். *இயேசு கிறிஸ்துவின் வேண்டுதல் பிதாவிடம் இருந்தது*. 1யோ. 2:1-2
பேதுரு தோல்வியடையக்கூடாது என்று கிறிஸ்து ஜெபித்ததற்கு பேதுருவின் மனந்திரும்புதல் நமக்கு விடை அளிக்கிறது. மத். 26:75
நம்முடைய கர்த்தர் அவருக்காக ஜெபம் செய்தது நிச்சயமாக பேதுருவின் நன்மை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர், கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
தொடர்பு : +91 81 44 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*
புதன், 26 மே, 2021
#1102 - கர்த்தர் சாத்தானிடம் வேண்டலாமா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக