தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee
உன்னதமான தேவனின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
குரலுக்காக, இனிமைக்காக, அழகிற்காக, நேர்த்தியாய் இருக்கும்படி கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் பலரும் எப்படியாவது தன் பாடலோ, தன் புத்தகமோ, தன் நிகழ்ச்சியோ பிரபலமடைய வேண்டும் என்று பிரபலமானவர்களையும், சினிமாக்காரர்களையும், கிறிஸ்தவரல்லாதவரையும் வைத்து கொண்டாடுகின்றனர்… அரசியல்வாதிகளை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை !!
தமிழகத்தில் மிகப்பிரபலமானவரின் முகவுரையை வாங்கித் தருவதாகவும், அதை என் Q&A வேதாகம கேள்வி பதில் புத்தகத்தில் பதிவிட்டால் பல ஆயிரம் பிரதிகள் விற்பனையாகும் என்று ஒரு முக்கியப்புள்ளி என்னை அணுகினார்.
பணம் அல்ல, சத்தியத்தில் உள்ளவர்களே முக்கியம் என்று மறுத்து, சத்தித்தில் நிலைநிற்கும் இரண்டு ஊழியர்களை (என் தகப்பனார் காலத்தின் ஊழியர் சகோ.பிரேம்குமார் & என் வயதில் உள்ள சகோ.இளையராஜா) அவர்களைத் தேர்ந்தெடுத்து என் புத்தகத்திற்கு முன்னோட்டமும், கருத்துரையும் எழுத வேண்டிக்கொண்டேன்.
ரோமருக்கு எழுதின நிருபத்தை பவுல், தெர்தியு என்னும் கிறிஸ்தவனைக் கொண்டு எழுதினார் என்பது நமக்குப் பாடம் !!
ரோ. 16:22 இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன் என்றார்.
நாம் எதை செய்தாலும் கிறிஸ்து தான் அதில் மகிமைப்பட வேண்டும்.
சுய பெயர் பிரஸ்தாபத்திற்காக ஓடாமல்,
கிறிஸ்துவையே முன்னிறுத்துவோம்.
அனைவரையும் விழுங்கும் மரணத்தையே ஜெயித்த இயேசு கிறிஸ்து வெற்றியாளனாயிற்றே…அவரை உண்மையாய்ப் பற்றிக்கொண்டால், நம்மையும் வெற்றியடையச் செய்வார். !!
எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
செவ்வாய், 9 மார்ச், 2021
தினசரி சிந்தனைக்கான வேத துளி 9 Mar 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக