*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
எப்போதும் நம்மை காக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தேவனுடைய கிருபை எல்லோர் மீதும், எப்போதும் உண்டு. ஆனால், அவருக்கு கீழ்படிந்தாலேயன்றி அவரின் இரட்சிப்பையும் பாதுகாப்பையும் எவரும் அடைய முடியாது.
முதலாவது தேவனுக்கு கீழ்படிதல். பின்னர் மற்ற அனைத்தும் தாமாகவே வருகிறது.
தானியேலும் அவனது மூன்று நண்பர்களும்;
முதலாவது தேவனுக்கு கீழ்படிந்தார்கள். *பின்பு* பிரதானியின் கண்களில் தயவு கிடைக்க தேவன் கிருபைச் செய்தார். தானி. 1:8
தேவனை உறுதியாய் பற்றிக்கொண்டு *நம்பி இருக்கும் போது* அவர் நம்மில் சகல சமாதானத்தையும் அனுமதிக்கிறார். ஏசா. 26:3
சமாதானமும், சந்தோஷமும் நம் வாழ்வில் பெற, கிறிஸ்துவை வெறுமனே அல்லேலூயா, ஸோத்ரம் ஆண்டவரே என்று கதறிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் *அவர் வார்த்தைக்கு கீழ்படிந்து* செயல்படுத்துவதே அவசியம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக