*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சிலுவை பரியந்தம் தம்மை தாழ்த்தி நமக்கு மாதிரியை காண்பித்த கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
பெருமையும், கவுரவமும், அந்தஸ்தும் ஒருபோதும் மனுஷனை வாழவிடாது.
உழைப்பும் அர்ப்பணிப்பும் நம்மை எந்த சூழ்நிலையிலும் தாழ்த்திடாது.
வானத்திலிருந்து பெரிய படையோடனோ,
ஆடம்பரத்தோடனோ,
தங்க கிரீடம் வைத்துக்கொண்டோ,
தங்கத் அணிகளன்களுடனோ,
அக்கினி பறக்கும் பட்டயத்துடனோ,
பெரிய நாக்கும் கண்களையும் வைத்துக்கொண்டோ,
மனிதர்களை பயமுறுத்தியோ,
குத்தி கொலை செய்யும் அபாயகர ஆயுதங்களுடனோ இந்த உலகிற்கு வரவேண்டும் என்று நினைக்காமல் :
கர்த்தரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து,
தேவ குமாரனாக,
மாம்சத்தில் வெளிப்பட்டு,
ஏழை வீட்டில்,
சாதாரண பெத்லகேம் கிராமத்தில் பிறந்து,
எல்லோராலும் ஒதுக்கப்பட்ட நாசரேத்தில் ஊரில் வளர்ந்து (யோ. 1:46), தாழ்த்தப்பட்ட கலிலேயாவில் ஊழியம் செய்து (யோ. 7:52),
சர்வ சூழ்நிலையிலும் தாழ்மையை வெளிபடுத்தி,
தன் பிதாவாகிய தேவனின் கட்டளையை நிறைவேற்றி,
மரணத்தை வெற்றிச்சிறந்து,
அநேகர் காணும் போது, வான மேகங்களிணூடே பரலோகம் ஏறி சென்றார்..
அப்பேற்பட்ட இரட்சகரின் வார்த்தைக்கு செவிகொடுத்து, கீழ்படிந்து,
கிறிஸ்துவின் அடிச்சுவடியை பின்பற்றி,
அவரைப்போல தாழ்மையோடு இருப்போம்...
ஆண்டவர் உயர்த்துவார் !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக