*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நம்மை அதிகமாய் நேசிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நம்மை ஆதாயப்படுத்துவதற்கென்று, தன் சொந்த குமாரனையே கொடுத்த பிதாவாகிய தேவனுக்கு நாம் கீழ்படியும் போது எந்த சூழ்நிலையிலும் நம்மை அவர் பாதுகாக்க வல்லவராய் இருக்கிறார்.
1- *கொல்லுவதற்காக* இராணுவ வீரர்கள் சூழ்ந்து வந்தபோதும் கூட, கடைசி நொடியில், ”யூதாவின் ராஜா” என்றறிந்ததும் – அவர்கள் யோசபாத்தை *விட்டு தூர போனார்கள்* (1இராஜா 22:32-33)…
”400 தீர்க்கதரிசிகளும் ஆம் என்று சொன்னாலும், கர்த்தருடைய தீர்க்கதரிசனமே தனக்கு முக்கியம்” என்று *கர்த்தரின் வாக்குக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், அவனுக்கு ஜீவன் கிடைத்தது*. 1இரா. 22:6-28
2- ஆகாப் தன் *உயிரை காப்பாற்றிக்கொள்ள, மாறு வேஷத்தில் இருந்த போதும்*, ஈட்டி அவனை பிளந்து கொன்றுபோட்டது. கர்த்தருடைய வார்த்தைக்கு *செவி சாய்க்காததால்*...1இரா. 22:34-37)
கர்த்தருடைய வார்த்தையை *கேட்பதோடு நில்லாமல், கீழ்படிவோம்*. நம் தேவைகளை அவர் எந்த சூழ்நிலையிலும் சந்திப்பார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக