*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சிலுவை நாதர் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
யூதர்கள் பொறாமையினாலே இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள் (மத். 27:17). ஆனால் சிலுவையில் தான் மரிக்க இருப்பதை இயேசு முன்னமே அறிந்திருந்தார். (மத். 20:18-19)
அவர் பிறந்ததன் நோக்கமே, இரத்தம் சிந்தி, நம்முடைய பாவங்களுக்காக பலியாக வேண்டும் என்பதே !! அது தான் பிதாவின் திட்டம். (மத். 26:39, 53-54; யோ. 12:27, எபி. 10:5-9)
கிறிஸ்து, சிலுவையில் மரித்ததன் மூலம் பிதாவானவர் நமக்கு அருளிய கிருபைகளில் சில கீழே பட்டியலிட்டிருக்கிறது.
அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிகாலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார் (எபி. 9:26)
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொண்டார். (கொலோ. 1:20)
நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோம். (ரோ. 5:10)
தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (எபி. 9:12)
நாம் காலகாலமாய் கேட்டு வளர்ந்த அல்லது நம்பிக்கொண்டிருக்கும் *கொள்கைக்கு மாறாக* வேதத்தின் வசனங்கள் இருந்தால்; அதை உணர்ந்து, தன் உயிரையே கொடுத்து நம்மை மீட்ட *இயேசுவின் போதனைக்கு கீழ்படிவோம்*. மனித போதனைக்கல்ல வசனத்திற்கே கீழ்படியவேண்டும்..
நமக்காய் பலியான கிறிஸ்து இயேசுவின் மீட்பிற்கு பாத்திரமாய் நாம் நடந்துகொள்வோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக