*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நம்மை எந்த நேரத்திலும், எப்போதும் பாதுகாக்கும் தேவனின் நாமத்திற்கே சகல துதியும் உண்டாவதாக.
நாம் வானத்தில் பறந்தாலும்,
கடலில் பிரயாணம் செய்தாலும்,
பாதாள சுரங்கத்தில் வேலை செய்தாலும்,
அயர்ந்த தூக்கத்தில் இருந்தாலும்,
ஆண்டவராகிய கிறிஸ்து நம்மை எப்போதும் பாதுகாக்கிறவர்.
எத்தனை வகையில்,
எந்த மார்க்கத்தில் விரோதிகள் வந்தாலும்,
வல்லமையுள்ள தேவன் நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை.
விசுவாசத்தையும்,
அன்பையும்,
நீடிய பொறுமையையும்,
அமைதியையும்,
“நாம் காக்கும் போது,”
நிச்சயமாய்,
சகல துன்பத்திலிருந்தும் தேவன் நம்மை விலக்கிப் பாதுகாப்பார்.
சங். 139:8-10 நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
நாம் செய்யவேண்டியதெல்லாம்… அவரிடம் நம் விஷயங்களை ஒப்புவித்து விட்டு பொறுமையாயிருங்கள் !! பிலி. 4:6
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக