செவ்வாய், 16 மார்ச், 2021

#1085 - நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்ற ஆதி. 3:16-ஆம் வசனம் மற்றும் நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்ற ஆதி. 4:7-ஆம் வசனத்தையும் விளக்கவும்

#1085 - *நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்ற  ஆதி. 3:16-ஆம் வசனம் மற்றும்  நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்ற ஆதி. 4:7-ஆம் வசனத்தையும் விளக்கவும்*.

*பதில்* : ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, பெண்ணுக்கு பிரசவத்தில் வலி மற்றும் கணவரின் அதிகாரத்திற்கு அடிபணிவது போன்ற சில நிரந்தர விளைவுகளை கடவுள் அவர்களின் மீறுதலுக்கான தண்டனையாக ஏற்படுத்தினார். (ஏசா. 26:17, யோ. 16:21, எபே. 5: 22-24)

வசனத்தை கவனிக்கவும் :
அவர் ஸ்திரீயை நோக்கி:
நீ கர்ப்பவதியாயிருக்கும்போது
உன் வேதனையை
மிகவும் பெருகப்பண்ணுவேன்;
வேதனையோடே
பிள்ளை பெறுவாய்;
உன் ஆசை
உன் புருஷனைப் பற்றியிருக்கும்,
அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.

எபிரேயத்திலிருந்து வந்த (KJV) ஆங்கில மொழிபெயர்ப்பில் : 
Unto the woman He said,
I will greatly multiply thy sorrow *and*
thy conception;
in sorrow thou shalt bring forth children;
and thy desire shall be to thy husband, *and*
he shall rule over thee.

சில மொழிபெயர்ப்பாளர்கள் இதை இரண்டு விஷயங்களின் பட்டியலாகப் படிக்கிறார்கள்:
கர்ப்பத்தில் சிரமங்கள் மற்றும் பிரசவத்தில் வலி.

மற்றவர்கள் இதை மூன்று விஷயங்களின் பட்டியலாகப் படிக்கிறார்கள்:
(1) வலி, சிரமம் அல்லது கஷ்டம்,
(2) கர்ப்பமாக இருப்பதில் சிரமங்கள்,
(3) பிரசவத்தில் வலி.

இணைச்சொல் இருப்பதால், மூன்று என்பது சரியானது என்பது என் கருத்து.

*உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும்* என்ற வாக்கியத்திற்கு  குழந்தையைத் பெறுவதில் பெண்ணின் சிரமங்கள் மற்றும் வேதனைகள் வர இருந்தாலும்; திருமண படுக்கையை பயன்படுத்துவதற்கான அவளது விருப்பம் என்று சிலர் புரிந்துகொள்கிறார்கள். மாறாக, அவளது எந்த விருப்பத்தையும் தன் கணவனிடம் கேட்கவும்,  குறிப்பிடவும், அது அவளுக்கு அவசியமா, தேவையா என்பதை கணவனின் விருப்பத்தால் கட்டுப்படுத்தப்படுவதைக் குறித்து உள்ளவை. எண். 30:7-8

*ஆதியாகமம் 4:7ல் நீ நன்மை செய்தால் மேன்மையில்லையோ என்ற வாக்கியத்தின் பொருள்* : தீங்கு செய்ததால் உன் முகநாடி (வ6) வேறுபட்டுள்ளது. நன்மை செய்திருந்தால், தெளிவாக தைரியமாக இருக்கலாமே என்பது. அப். 10:35, ஏசா. 3:10-11

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக