*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சமாதானத்தின் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
நான் ஒரு மனுஷனை பார்த்தேன், ஒருவேளை இவர் தான் நாம் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்த இரட்சகரோ? என்று சமாரியா ஸ்திரீ ஊருக்குள் போய் ஜனங்களை கூட்டிக்கொண்டு இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தாள். யோ. 4:28-29
இக்கால பிரசங்கிமார்கள், முதல் சுவிசேஷகி அவள் தான் என்று சிலர் சொல்லுவதுண்டு.
இந்த ஸ்திரீயின் வார்த்தையின் நிமித்தம் அநேகர் இயேசுவை விசுவாசித்தார்கள் என்று 39ம் வசனம் சொல்கிறது..
ஆனால், இந்த சம்பவத்தில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு பாடம் உண்டு.
சிலர் அவளிடத்தில் வந்து, தங்கள் கவுரவத்தை நிலைநிறுத்திக் கொள்ளும்படி, “குறிப்பாக தாங்கள்,” கிறிஸ்துவை *அவள் மூலமாக, அவள் சொன்னதினால்* விசுவாசிக்கவில்லை என்பதை சொல்லிக் காண்பித்து, மற்றவர்கள் முன் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்கள் !! (வ42)
அவளின் பழைய வாழ்கையை நினைத்ததாலேயோ என்னவோ அவள் மூலமாக வந்த நன்மையை அங்கீகரிக்க அவர்களது மனம் ஏற்கவில்லை.
ஒருவர் மனந்திருந்திய பின்னும், அவரின் பழைய காலத்தை நினைவு படுத்தி, நிகழ்காலத்தின் நடக்கையை *குறை கூறினால், குறை சொல்பவரின் சொந்த மனந்திரும்புதல் கேள்விக்குறியாகிறது*..
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக