வெள்ளி, 12 மார்ச், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 12 Mar 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

தூரத்திற்கும் சமீபத்திற்கும் தேவனாகிய சர்வ வல்லவரின் நாமத்திற்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக !!

 

தாங்கள் எட்டின அளவு, விஞ்ஞானிகள், வானத்தில் கடைசியாக கண்டு பிடித்தது PSR B1509-58 என்று பெயரிடப்பட்ட ஒரு பகுதி.. அது, ஒரு கையைப் போல காணப்படுவதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி சொல்கிறது.

 

அந்த இடம் பூமியிலிருந்து 160,832,423,211,032,540 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது !! அதாவது 17,000 ஒளி வருடம் (Light years).

1 நொடிக்கு 3,00,000 கி.மீ வேகத்தில் பிரயாணித்தாலும் 17,235 வருஷங்கள் ஆகும் !!

 

தரையிலிருந்து கொஞ்ச தூரம் வானத்தில் விமானம் பறந்ததும் கீழேயிருக்கும், மிகப்பெரிய மாளிகைகள் கூட ஒரு புள்ளி போல தான் நம் கண்களுக்குத் தெரிகிறது. எவ்வளவு தேடினாலும் மனிதர்களைக் காணமுடியாது.

 

விஞ்ஞானிகளால் காணவே முடியாத தொலைதூரத்தில் இருக்கும் பரலோகம் இன்னும் கணக்கிடமுடியாத தூரத்தில் இருக்க வேண்டும் !!

 

இருந்தபோதும், நம் ஜெபமும் விண்ணப்பமும், அவர் காதுகளில் எட்டக்கூடிய அளவிற்கு வானத்திலிருக்கும் தேவன், நம் அருகே நின்று கவனிக்கிறார் என்றால் நாம் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள் … எழுதும் போதே என் உடம்பு சிலிர்க்கிறது !!

 

என் அன்பின் பிதாவே, தேவனே, மாட்சிமை நிறைந்தவரே மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்”? யோபு 7:17-18

 

உம் கிருபை எவ்வளவு பெரிது அப்பா... உம் நாமம் வாழ்க.

 

அப்பேற்பட்ட உன்னதமானவரின் வார்த்தைக்கும் கட்டளைக்கும் செவிசாய்த்து கீழ்படிய யோசிக்கவேண்டுமோ?

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

 

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :

https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக