சனி, 6 பிப்ரவரி, 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 6 Feb 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி

by : Eddy Joel Silsbee

நம்மை பரிசுத்தமாக்கும் பிதாவாகிய தேவனுக்கே சகல மகிமையும் உண்டாவதாக.

கடந்த சில நாட்களாக தேவனுடைய நாமத்தை தினம் ஒன்றை பார்த்து வருகிறோம்.

இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா மக்காதேஷ்*

ஆங்கிலத்தில் : Jehovah-M'Kaddesh

தமிழ் அர்த்தம் : உங்களை பரிசுத்தமாக்கும் தேவன்.

மொழி பெயர்த்ததால் இந்த எபிரேய வார்த்தை அப்படியே  தமிழ் வேதாகமத்தில் காண முடியவில்லை.

மொழி பெயர்க்கப்பட்ட முழுமையான வார்த்தையாக 2 முறை பழைய ஏற்பாட்டில் வருகிறது. யாத் 31:13, லேவி 20:8.  பரிசுத்தாமாக்கும் காரியத்தை குறித்து ஏறத்தாழ 700 முறை வருகிறது. 

*எவ்வளவு கீரிக்கொன்டாலும், பாத யாத்திரை போனாலும், தான தர்மங்கள் செய்தாலும் நம் பாவத்தை நாமே சுத்தம் செய்துக்கொள்ள முடியாது*.

பாவங்களை மன்னித்து நம்மை பரிசுத்தப்படுத்த ஜீவனுள்ள, சர்வ வல்லமையுள்ள, மகத்துவமுள்ள நம் ஆண்டவராலேயே முடியும் !!

கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை. 1 சாமு 2:2

கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? யாத் 15:11

கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன். லேவி 20:26

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/B811iEJfVGh5yRqnJiuTAj

எமது வலைபதிவுதளம்:

https://joelsilsbee.wordpress.com/

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக