செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி 23 Feb 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

ஜீவனுள்ள தேவ குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

என்றாவது ஒரு நாள் இரட்சிப்பை புரிந்து கொண்டு தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம் ஆண்டவர் ஒவ்வொருவரின் இருதய கதவுகளையும் தட்டிக்கொண்டே இருக்கிறார். (வெளி. 3:20)

 

படைத்த கடவுள் இதய வாசலில் காவல் கிடக்க, உருவாக்கப்பட்டவைகளை காணும்படி கால்நடையாய் ஆயிரமாயிரம் மைல்கள் நடக்கவேண்டிய அவசியமில்லை.

 

தலை முடியையோ, கோழி இரத்தத்தையோ, சாராயத்தையோ, ஆட்டு பிரியானியையோ, மனித பலியையோ கொடுத்து இரட்சிப்பை  விலைக்கு வாங்க முடியாது.

 

ஏன் இரட்சிப்பை விலை கொடுத்த வாங்க முடியாது? 

தற்கு எவரும் விலையை நிர்ணயிக்க முடியாது !!

ஆகவே அதை பரிசுத்தமான இரத்தத்தை கொண்டு வாங்கப்பட்டது.

 

ஏன் இரத்தத்தால் வாங்கவேண்டும்?

இரத்தத்திற்கு எவரும் விலை நிர்ணயிக்கமுடியாது.

அதை சாப்பிடவுங்கூடாது. அதை தரையிலே ஊற்றிவிடவேண்டும். உபா. 15:23

 

ஏன் விலையை நிர்ணயிக்க முடியாது?

உயிரை எவரும் உருவாக்கமுடியாது. அந்த உயிர் இரத்தத்தில் இருப்பதால் அதற்கு விலையை எந்த கொம்பனும் நிர்ணயிக்கமுடியாது. ஆதி. 9:4 லேவி. 17:11

இரத்தம் ஜீவனுக்கு சமானம். லேவி. 17:14

 

பாவமன்னிப்பிற்காக நியாயபிரமாணத்தின்படி, இரத்தம் சிந்தப்பட்டது. லேவி. 17:11

 

அந்தப்படி, நியாயபிரமாணத்தை சிலுவையில் முடித்து வைத்து, தன் விலைமதிப்பில்லா பரிசுத்தமான இரத்தத்தால் இயேசு கிறிஸ்து நமக்காக பாவமன்னிப்பை பிதாவினிடமிருந்து வாங்கினார். மத். 27:4, 26:28, எபி. 9:18-28

 

வியாபாரத்திற்கு அல்ல, அப்பேற்பட்ட விலையில்லா இரட்சிப்பை, நமக்கு இலவசமாக தந்தார்.

 

வாழ்நாள் முழுக்க சம்பாதித்த தொகையை கொடுத்தாலும் - பரலோகத்தில் ஒரே ஒரு சென்ட் நிலம் வாங்கி விட முடியுமோ?

 

அனுமதி இல்லாமல் இருதயத்தில் நுழைந்து அலைக்கழிப்பது சாத்தான்.

ஆண்டவரோ, உங்கள் அனுமதிக்காக காத்து நிற்பார். !!

 

கிறிஸ்துவை – தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து ஞானஸ்நானம் பெறும்போது, அதுவரை செய்த எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு இரட்சிப்புக்கு உள்ளாகிறோம். (மாற்கு 16:16)

 

இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் *என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்*, அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம் என்றார் - யோ 14:23

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

Q&A Biblical Book ஆர்டர் செய்ய :

https://wp.me/pbU5iQ-1dK
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக