#1080- *இயேசு காடியை வாங்கினபின்பு*, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். யோவான் 19:30. இந்த வசனத்தில் உள்ள இறையியல் என்ன?
*பதில்*: மூன்று தனித்தனியான சந்தர்ப்பங்களில் இயேசுவுக்கு காடி கொடுக்கப்பட்டது.
*சிலுவைக்கு முன்* கசப்புக்கலந்த காடி/வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசம்
கபாலஸ்தலம் என்ற கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது (மத். 27:33) *கசப்புக்கலந்த காடியை* அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார் என்று மத்தேயு 27:34ல் வாசிக்கிறோம்.
மாற்கு புத்தகத்தில், *வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை* அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அறிகிறோம். மாற்கு 15:23
மாற்கு 15:23 திராட்ச ரசத்தை வெள்ளைப்போளத்துடன் கலந்ததாகக் கூறுகிறது. வாசனை திரவியத்திலும், பிணம் பதப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிற ஒரு வகை இது. வழக்கமாக வலியைக் குறைக்க உதவும் ஒரு பானம். இந்த கலவையை ஒரு கோப்பையில் கிறிஸ்துவுக்குக் கொடுத்திருக்கலாம்.
*சிலுவையில்* - கேலி செய்யும்படியாக கொடுக்கப்பட்ட தருணம்.
இரண்டாவது முறையாக இயேசுவுக்கு காடி வழங்கப்பட்டது. இராஜாக்கள் திராட்சரசம் அருந்துவது போல, நீர் யூதருடைய ராஜா அல்லவா என்று அவரை பரியாசம் செய்யும்படியாக புளித்த, கெட்டுப்போன கிரேக்க வார்த்தை ஆக்ஸோஸ் என்று பொருள்படும் காடியை கொடுக்கிறார்கள். இந்த நிகழ்வு லூக்கா 23:36 ல் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்”. லூக்கா 23:35-37
*சிலுவையில்* - கடற்காளானில் தோய்த்த புளித்த காடி
மத்தேயு 27:48; மாற்கு 15:36 மற்றும் யோவான் 19: 29-30 ஆகிய வசனங்கள் இதை தெரிவிக்கிறது.
மத். 27:48 உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
மாற்கு 15:36 ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்.
யோ. 19:28-30 அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
கிரேக்க சொல் ஆக்சோஸ் என்பதற்கு புளித்த அல்லது மலிவான, கெட்டுப்போன திராட்சரசம் என்பது. இவ்வகை பானம், ஒருவரின் தாகத்தைத் தணிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காடி நிறைந்த ஒரு குடம் (பாத்திரம்) அருகே வைக்கப்பட்டிருந்ததை யோவான் 19:29 கூறுகிறது.
என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள் என்று சங்கீதம் 69:21ல் தீர்க்கதரிசனமாக சொல்லப்படுவது இங்கு நிறைவேறியுள்ளது.
அதிபயங்கரமான மரண வேதனை, இராமுழுதும் சாட்டை அடிகள், தலையில் எண்ணிமுடியாத காயங்கள், முட்களினால் ஏற்படுத்தப்பட் துளைகள், அதிலிருந்து கொட்டிய இரத்தம், சாட்டையால் சரீரத்தின் கிழிக்கப்பட்ட சதைகள், அதிலிருந்து வடிந்துக்கொண்டிருக்கும் இரத்தம், ஆகாரமும், சரீர பெலமும் இன்றிய சூழ்நிலையிலும் பட்டணத்திற்கு வெளியே சிலுவையை இழுத்துக்கொண்டு மலைமேல் ஏறினது, கைகளிலும் கால்களிலும் இரும்பு கம்பியால் துளைத்து மரத்தோடு ஆணியடித்து தொங்கிக்கொண்டிருக்கும் போது, வெளிச்சம் சரீரத்தில் படும்போது பிளந்திருந்த சதைகளில் வடியும் இரத்தம் காய்ந்து சுருங்க, ஒரு பக்கம் அனைத்து இடங்களிலிருந்தும் மீதமிருந்த இரத்தம் வெளியேறி சரீரம் முழுவதுமாய் துவண்டிருக்கும் போது, வலியால் துடித்து, கதறி, சப்தமிட்டு, எச்சில் கூட காய்ந்திருக்கும் சூழ்நிலையில் முற்றிலும் கடைசியில் தன் ஜீவனை கொடுக்கவேண்டிய அந்த முடிவின் வினாடி துளிகளில், தன் ஜீவனை பிதாவிடம் ஒப்புக்கொடுக்கும் வார்த்தையை உச்சரிப்பதற்கு வேண்டிய தன் வரண்ட நாவிற்க்கான அந்த ஈரம் வாயில் பட்டதும் பிதாவிடம் தன் ஜீவனை கொடுத்து விட்டார். “இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்”. யோவான். 19:30
சிலுவையின் முழு மரண வேதனையையும், வலியையும், எந்த வலிநிவாரணியும் இன்றி முழுமையாக சகித்தார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இன்னுமொரு கவனிக்கவேண்டிய விசேஷம், *கடற்காளான் என்கிற ஈசோப்பு* (hyssop) யூதர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர்கள் செய்த ஒரு காரியத்தை இங்கு உங்கள் முன் வைக்கிறேன்.
யாத். 12:22 ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்துக் கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்…
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம்தான் இஸ்ரவேலரை மரணத்திலிருந்து காப்பாற்றியது. சிலுவையில், தேவனுடைய பரிபூரண ஆட்டுக்குட்டி மனிதகுலத்தை காப்பாற்ற அவரது வாழ்க்கையின் இரத்தத்தை கொடுத்தது.

சிலுவையிலிருந்து அவரது கடைசி வார்த்தைகள் “எல்லாம் முடிந்தது” என்பது. இயேசு கிறிஸ்து, தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு வந்தார். அவருடைய வாழ்க்கையிலும், ஊழியத்திலும், மரணத்திலும், அவர் தம்முடைய பரலோகத் தகப்பனின் விருப்பத்தை பூர்த்திசெய்து, மனிதகுலத்திற்காக சரியான பாவநிவாரண பலியாக ஒப்புக்கொடுத்தார்.
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார். வெளி. 5:12
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக