வெள்ளி, 13 நவம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 13 Nov 2020


 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

புதிய உடன்படிக்கையின் நாயகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

கிறிஸ்துவின் காலத்தில் நாம் இருக்கிறோம்.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்தவர்.
கிறிஸ்தவராகிய நமக்கு கிறிஸ்துவே தலை. (கொலோ 1:18)
அதாவது, தலைக்கு கீழே உள்ள சரீரம் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று தகவலை அனுப்பும் மூளை.

ஆகவே, கிறிஸ்து சொன்ன உபதேசத்தை மாத்திரமே, அல்லது கிறிஸ்துவின் உபதேசத்தை மட்டுமே பின்பற்றவேண்டியவர்கள் நாம்.

தன் சிலுவை மரணத்துடன், நியாயபிரமாணத்தை நிறைவேற்றி, முடித்து வைத்தார். ரோ 10:4, மத் 5:17

இவைகளை எப்போதும் கற்றாலும்,
ஒருபோதும் உணராமல்,
தானும் திருந்தாமல்,
மற்றவர்களையும் மாற்று பாதையில் வழி தப்பி நடத்தும் நியாயப்பிரமாண போதகர்களை என்ன சொல்வது? (1 தீமோ 1:7)

நியாயபிரமாணத்தை பின்பற்ற சொல்லி வற்புறுத்தும் இவர்கள் - கிறிஸ்து மரித்ததை மறுதலிக்கிறவர்கள் (கலா 2:21)

புதிய ஏற்பாட்டையும் பழைய ஏற்பாட்டையும் சேர்த்து ஒரு கலவையாய், தனக்கு வேண்டியதையும், ஆதாயம் தருவதையும்,  புரிந்ததையும், மாத்திரம் போதித்து தங்கள் மந்தையை சாபத்திற்குள் நடத்துகிறார்கள் (கலா 3:10)

நீதிமானாய் நடக்கவேண்டும் என்று ஆரம்பித்து, நியாயப்பிரமாணத்தை உபதேசத்தினுள் நுழைத்து தானும் தன் பேச்சை கேட்பவர்களையும் கிறிஸ்துவின் கிருபையினின்று விழ செய்கிறார்கள் (கலா 5:4)

ஆவியின் பெயரை சொல்லி நியாயப்பிரமாணத்தில் வழிநடத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடமே தவறு என்பதை அறியாமல் இருப்பது வேதனையிலும் வேதனை (கலா 5:18)

சமாதான வசனத்தை தேடியே காலத்தை ஓட்டாமல் கற்றுக்கொள்வதற்காகவும் வேதாகமத்தை படிப்போம்..

கிறிஸ்துவின் போதனைக்கு மட்டுமே கீழ்படிந்து, கிறிஸ்தவராக நடப்போம்.

கிறிஸ்துவே நம் தலை என்பதை உணர்ந்து, அவர் ஆளுகைக்கு ஒப்புக்கொடுத்தால், வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையுள்ளவரின் கைக்குள் நாம் அடங்கியிருப்பது எவ்வளவு பாதுகாப்பானது !

*இன்றைய zoom ஆன்லைன் வேத வகுப்பில் (வாரம் ஒரு தலைப்பு) கலந்துக்கொள்ள அழைக்கிறேன்*.

*நேரம்* :
மாலை 7.00 மணி (இந்திய நேரம்)
மாலை 5.30 மணி (வளைகுடா நேரம்)

https://us04web.zoom.us/j/76128620925

Meeting ID: 761 2862 0925 (Passcode: bible)

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக