சனி, 17 அக்டோபர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 17 Oct 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee

சகல ஒழுக்கத்திலும் நம்மை நடத்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்ற மத்தேயு 23:3ம் வசனத்தை கோடிட்டு காண்பித்து எங்களை பாராதேயுங்கள், நாங்கள் எங்கள் வழிகளில் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வோம், மனிதர்களல்லவா, சின்ன சின்ன சில்மிஷகங்களை கண்டுகொள்ள வேண்டாம், எங்களையல்ல, இயேசுவையேப் பாருங்கள் என்று மேடையில் கர்ஜிக்கும் போலிகளை நம்பி ஏமாந்துவிடாதேயுங்கள்.

இயேசு கிறிஸ்து கோடிட்டது மோசேயின் ஆசனத்தில், நியாயபிரமாணத்தில் இருக்கிற ஆசாரியர்களை குறித்து சொன்னார். மத் 23:2

நாமோ நியாயபிரமாண காலத்தில் அல்ல, கிறிஸ்துவின் காலத்தில் இருக்கிறோம்.

கிறிஸ்துவின் காலத்தில், போதிக்கிறவன் முதலாவது யோக்கியனாய்
ஒழுங்காய் நடக்கவேண்டும். பின்பு அதை போதிக்க வேண்டும்.

ஆதார வசனங்கள் கீழே:

1கொரி 11:1 ”நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்”.

தீத்து 2:7-8 ”நீயே எல்லாவற்றிலும் உன்னை மாதிரியாக காண்பி, எதிரியானவன் பொல்லாங்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லாமல் நடந்துக்கொள்..

1கொரி 4:16 ”ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்”.

1கொரி 10:33 ”நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்”.

பிலிப் 3:17 ”சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்”.

1தெச 1:6-7 ”நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்”.

2தெச 3:9 ”உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்”.

ரோ 15:2 ”நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்னையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்”.

எபே 5:1-2 ”ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்”.

எப்போதும் மற்றவர்களை நல்வழிப்படுத்துவதற்கு முன்னர் சொல்லும் காரியத்தில் நம்மை நாமே சோதித்து சரி செய்து கொள்ள வேண்டியது அவசியமும் அத்தியாவசியமானது.

மேடையில் மாத்திரம் தன்னைப் பரிசுத்தவானாய் காட்டிக்கொள்பவர்களைக் குறித்து - கிறிஸ்து இயேசுவானவர் அவர்களை வயிற்றைக் குமட்டி, நாற்றமெடுக்கும் அழுகின பிணக்குழியை போல உள்ளவர்கள் என்கிறார். மத் 23:27

அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள். தீத்து 1:16

சுய பரிசோதனையும், சுயசரிபார்த்தலும் மேடையேறுவதற்கு முன்னர் மிக மிக மிக மிக அவசியம். அவ்வாறில்லாமல் மற்றவர்களுக்கு பிரசங்கம் செய்வது ஆபத்து. யாக் 3:1

Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக