*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
உன்னதங்களில் வாசம் செய்யும் நம் பரம பிதா இன்னும் நம்மை பரிசுத்தப்படுத்துவாராக.
உலகத்திலும் அதில் உள்ளவைகளிலும் அன்புக்கூறாதிருங்கள் என்று கிறிஸ்து சொன்னார் (1யோ 2:15)
வாழ்க்கையை நடத்தி செல்ல பணம் அவசியம்.
குடும்பத்தின் அவசர தேவைக்கு சேமிப்பு அவசியம் (நீதி 21:5,20)
பண ஆசை / அதாவது, தேவைக்கு மேல் அதீதமாக செயல்பட்டு, வேதாகமம் படிக்கவும், சபைக்கு போகவும், ஜெபிக்கவும் நேரமில்லாமல் இருப்பது, அத்தியாவசியத்திற்கு கூட மற்றவர்களுக்கு உதவாமல் கையை மடக்கிப் பிடிப்பது – எல்லா தீமைக்கும் வேர். அனைத்து தீமைகளும் தளிர் விட்டு, வளர்ந்து, குடும்பத்தினில் மரமாக வளர்ந்து விடும்.
வீட்டிலும், வங்கியிலும், நகையையும் பணத்தையும் சேமித்து வைத்துக் கொண்டு, நகை அணியக்கூடாது என்ற கொள்கையானது உள்ளார்ந்த ஆசையை வெளிப்படுத்துகிறது.
நகை அணிவதும், அணியாமல் விடுவதும், அவரவர் சொந்த விருப்பம். சுய விருப்பத்தில் சிலர் நகையை தவிர்த்திருப்பார்கள். அவர்களுக்கும் தேவனுக்கும் உள்ள ஒப்பந்தம் அது. நகை போடவேக்கூடாது என்று கொள்கையாக பறைசாற்ற வேதம் கட்டளையிடவில்லை.
எல்லாவற்றையும் அள்ளி அணிந்துக் கொள்வதும் தவறு. அது தன் பெருமையைக் காண்பிக்கிறது. வேதம் வன்மையாக அதைக் கண்டிக்கிறது.
1 பேதுரு 3:3ஐ மேற்க்கோள் காட்டுபவர்கள், தங்கள் தலை மயிரை பின்னாமல் விடுவார்களா?
ஆகாய் 2:8ல், வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசா 60:17 நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன் என்கிறார்.
ஆசையை அதன் மீது வைக்காமல் இருக்கவேண்டுமென்பதே முக்கியம்.
போதுமென்ற மனம் இருந்தால் – தேவன் ஆளுகை செய்வார். எபி 13:5
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக