#1023 - அப். 1:13−15 வசனங்களின் படியே 120 சீஷர்கள், கிறிஸ்துவின் சபையில் சேர்ந்து கொள்வதற்கு (அப். 2:47) ஞானஸ்நானம் பெற்றார்களா? இவைகளுக்கு வேத வசங்களின் படியாக விளக்கம் தரும்படி அன்போடு கேட்கின்றோம்!
*பதில்*: ஞானஸ்நானம் பெற்றவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். (மாற்கு 16:16) இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார். (அப். 2:47) அன்று, மேல்வீட்டறையில் கூடியிருந்த பதினொரு அப்போஸ்தலர்களும், ஏற்கனவே யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றவர்களாயிருந்த போதும், அவர்கள் (அந்த சூழ்நிலையில் பதினொரு பேர்) பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுவர் என்று கிறிஸ்துவால் “கட்டளைப் பெற்றனர்”. அப். 1:4 அப்போஸ்தலர், பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வது பிதாவின் வாக்குத்தத்தம். அப். 1:5 அதைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்கள் எருசலேமைவிட்டு வெளியே போகக்கூடாதென்று கட்டளைப் பெற்றார்கள். அப். 1:5 பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமானது, நூற்றிருபது பேருக்கு வாக்குத்தத்தம் பண்ணப்படவில்லை. அப். 1:3-5 பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர் (மத்தியாஸையும் சேர்த்து இப்போது பன்னிரெண்டு) மீது இறங்கின ஐம்பதாவது நாளன்று (பெந்தியோகோஸ்த் என்ற கிரேக்க பாஷைக்கு ஐம்பதாவது நாள் என்று அர்த்தம்) பேதுருவின் பேச்சைக்கேட்டு (சுவிசேஷத்தை) அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். அப். 2:41 அப்போஸ்தலர்கள், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றார்கள். அப். 2:3, 4, 7, 14. நீங்கள் குறிப்பிடும் 120 பேர் தண்ணீர் ஞானஸ்நானம் பெற்றிருக்கவேண்டும். அந்த 120 பேர் தண்ணீர் ஞானஸ்நானம் எடுத்ததற்கான பிரத்யேக குறிப்பு வேதத்தில் இல்லையென்றாலும், அவர்கள் சீஷராயிருந்ததினிமித்தம், நிச்சயம் பேதுருவின் வார்த்தையை கேட்டு சுவிசேஷத்திற்கு கீழ்பட்டிருக்கும் அனைத்து சாத்தியங்களும் உள்ளது எனலாம். இந்த பதிவை படித்ததும், சிலருக்கு 120 பேர் அன்று பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்றனர் என்று கேட்கத் தோன்றும். அவர்கள் பதில் எண் #493ஐ படிக்கவும். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக