*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நித்திய பிதாவாகிய நம் தேவன் நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.
தன்னை திசை மாற்றிக் கொண்டுப் போவதை கவனியாமல், அதீத குருட்டு நம்பிக்கையை, *வைராக்கியம்* என்று நினைத்து மெச்சிக்கொள்கிறார்கள் பலர்.
பிதாவை நோக்கி, இயேசு கிறிஸ்துவின் மூலமாக பரிசுத்த ஆவியானவரின் பெலன் கொண்டு ஜெபிக்கிறோம் என்கிறதை மறந்து, பரவச நிலை என்று கற்பனை செய்துக்கொண்டு, எதற்கு, ஏன், என்ன என்று புரியாமலேயே - பரிசுத்த ஆவியானவரிடம் ஜெபிக்கும் பழக்கம் தற்போது பரவலாக ஜனங்களிடத்தில் காணப்படுகிறது. இது வேத முறையல்ல !!
இயேசு கிறிஸ்து தான் பிதா என்றும், பிதா தான் ஆவியானவர் என்றும் குழப்பமடைய வேண்டாம்.
மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை அறியாவிடில், அவர்கள் கிறிஸ்துவிற்கே எதிரானவர்கள் என்று வேதம் எச்சரிக்கிறது.. (1 யோ 4:3)
பிதாவிடம் நேரடியாக ஜெபிக்கும் உரிமையை,
கிறிஸ்துவின் மூலம் அந்த அதிகாரத்தை/உரிமையைப் பெற்றிருக்கிறோம். யோ 15:16, யோ 14:16, 13-14, 16:23-24
ஆகவே, நம்முடைய ஜெபத்தை பிதாவிடம் நேரடியாக ஏறெடுக்கிறோம். கிறிஸ்து நமக்கு கொடுத்த உரிமையின்படி, அவருடைய அதிகாரத்தின்படி (நாமத்தின்படி) ஜெபிக்கிறோம்.
நம் வேண்டுதலையும், தேவைகளையும், நன்றிகளையும், தேவன் தாமே அங்கீகரிப்பாராக.
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக