*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
வல்லமையுள்ள தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
என்னுடைய வீடு குறைச்சலாய் இருக்க உங்கள் வீடுகளை மேம்படுத்துகிறதில் கவனம் செலுத்துவதால், நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக் கொண்டு வருகிறீர்கள்; … கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான் என்று ஆகாய் தீர்க்கதரிசி மூலமாய் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் சொன்ன வார்த்தை. (1:6)
அதாவது, கர்த்தருடைய காரியத்தை முதலாவது கவனிக்காமல், தன் சொந்த காரியத்தை கவனித்தால் எவ்வளவு கடினமாய் உழைத்தாலும் பெற்றுக்கொள்ளும் சம்பாத்தியம் நிறைவாக இருக்காது என்று அர்த்தம்.
உங்கள் மேலதிகாரி அல்லது எஜமானின் பிறந்த நாள் விருந்திற்கு நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால் எப்படிப்பட்ட பரிசை அவருக்குக் கொடுப்பீர்கள்? உங்கள் பரிசுகளினால் அவர் மேம்பட்டுவிடுவதல்ல, ஆனால், நீங்கள் கொடுக்கும் பரிசில் அவர் பிரியப்படவேண்டும் என்பதே உங்கள் நோக்கமாக இருக்குமல்லவா? பிலி 4:18
புதிய ஏற்பாட்டு சட்டத்தில் தசம பாகம் முறை இல்லை என்பதால், நம் பங்கிற்கு எதையாகிலும் செலுத்திவிடலாம் என்று நினைக்காமல், காணிக்கை என்பது தொழுகையில் ஒரு பங்கு என்பதை உணர்ந்து, தேவனை கனப்படுத்தவேண்டும். ரோ 12:1
ஆகவே, காணிக்கையை மனப்பூர்வமாயும் உற்சாகமாயும், மனநிறைவோடும் தேவனுக்கென்று செலுத்தும்போது, அதற்குறிய நிறைவான பலனை நாம் பெற்றுக்கொள்கிறோம். ஆதி 8:21
கட்டாயத்தின் பேரிலோ, கடமைக்கென்றோ, பையை நீட்டிவிட்டார்களே என்றோ, அருகில் இருப்பவர்கள் நம்மை தாழ்வாக நினைத்து விடுவார்கள் என்றோ காணிக்கை போடுவதில் எந்த பயனும் வராது. சங் 40:6, நீதி 21:3, 27, எரே 6:20, மாற்கு 12:33
மற்றவர்களும் சுவிசேஷம் அறிந்துகொள்ளும் பொருட்டு, நாம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதத்திற்காய் உதவ வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமை.
உத்தமமாய் முழு மனதுடன் செய்யும் போது, தேவன் நிச்சயம் அதை திரும்பத் தருகிறார். நீதி 19:17, எபி 6:10, 2கொரி 9:6-8, நீதி 11:25
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
செவ்வாய், 6 அக்டோபர், 2020
*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 06 Oct 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக