ஆகாயத்தையும், பூமியையும் படைத்த ஆண்டவர் 3வது நாள் பகலை ஆழ சூரியனையும், இரவை ஆழ சந்திரனையும் படைத்தார். பகலும் இரவும் இல்லாமல் எப்படி முதல் 2 நாட்கள் கணக்கிடப்பட்டன?
*பதில்* - கொஞ்சம் சிரமமான யோசிக்கவேண்டிய கேள்வி இது.
தேவன் ஆதியும் அந்தமுமானவர். வெளி. 1:18
அவரே அல்பாவும் ஒமேகாவுமானவர். வெளி. 22:13
பகல் எவ்வளவு இரவு எவ்வளவு என்று நாம் அனைவருமே சூரியனை அடிப்படையாக கொண்டு நேரத்தை கணக்கிடுகிறோம். அவைகளின் மூலம் ”நாம் இவ்வாறு காலங்களையும் நேரத்தையும் கணக்கிட வேண்டும் என்பது தேவனுடைய நீதி”. கீழே உள்ள வசனத்தை கவனிக்கவும்.
பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, *அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது* என்றார். ஆதி. 1:14
தேவனுக்கோ – தன் காலத்தை சூரியனின் அடிப்படையில் சொல்ல வேண்டுவதில்லை !! தான் உருவாக்கியதே தன்னை ஆட்கொள்ளுமோ ??
1ம் நாளில் வந்த வெளிச்சமே தன்னுடையதாயிருந்தது. 1யோ. 1:5
இருளிலிருந்து வெளிச்சத்தை பிரித்து பகல் என்றும்
இருளை இரவு என்றும் பெயரிட்டார். ஆதி. 1:5
சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் என்று தேவன் கணக்கிட்டார். ஆதி. 1:5
இந்த கணக்கை இடுவதற்கு ஒரு மூலாதாரம் கடவுளுக்கு அவசியமேயில்லை !!
ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பது தேவன் சூரியனை வைத்து அல்ல தானே அதை முதலாவது கணக்கிட்டு வகுத்தார் என்பது இதில் தெளிவாகிறது.
அதன் அடிப்படையிலேயே சூரியனும் சந்திரனும் தன் பாதையில் தேவனுடைய கட்டளைப்படி மனிதர்களுக்கு காலத்தை தெரிவிக்கிறது !!
கிறிஸ்துவின் வருகையிலே இந்த பூமியும் வானமும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் அழிக்கப்பட்டு நாம் தேவனோடு எப்போதும் கால அளவில்லாமல் அவரை துதித்துக்கொண்டேயிருப்போம். அல்லேலூயா !!! 2பேதுரு 3:10, 2பேதுரு 3:7, வெளி. 7:15.
ஆகவே, சூரியனை வைத்து தேவன் தன்னுடைய கணக்கை ஆரம்பிக்கவில்லை மாறாக தேவனின் கணக்கின் அடிப்படையிலேயே மணித்துளிகள் அமைக்கப்பட்டது என்பதை இதிலிருந்து அறிகிறோம். ஆதி. 1:14
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +91 81 44 77 6229
தொடர்பு : +91 81 44 77 6229
Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
-------------------------*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக