*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
பரலோகத்தின் செழிப்பையும் தேவ குமாரன் என்னும் மேன்மையையும் விட்டு தன்னைத்தானே வெறுமையாக்கி ஏழ்மையான ஏழை கோலம் எடுத்து இந்த உலகத்திற்கு “*கிறிஸ்துவாக*” இயேசு வந்தார். பிலி 2:6-7, யோ 1:14
இப்படி ஒரு ஏழையானவர் *இரட்சகராய் இருக்கமுடியாது* என்று பரிசேயர்களும் நியாயசாஸ்திரிகளும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோ 7:41
பட்டணத்தில் பிறந்து இருந்தாலும் பரவாயில்லை நாசரேத்து போல ஒரு குக்கிராமத்தில் இருந்து எப்படி வரமுடியும் என்று அவர்கள் மனம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தது. யோ 1:46
பல நேரங்களில் நாமும் இப்படி சிந்தித்து விடுகிறோம்.
பணமோ, செழிப்போ, ஆர்ப்பாட்டமோ, பகட்டோ, படிப்போ, மொழியோ, உடையோ, பந்தாவோ ஒன்றையும் ஆண்டவர் உங்களிடம் கேட்பதும், எதிர்பார்ப்பதும் கிடையாது. அல்லது அப்படிப்பட்டவர்களுக்கு முன்வரிசையோ, தனி ஸ்பெஷல் ஆசீர்வாதாமோ கொடுப்பதும் கிடையாது. ஏசா 58:2-3, ரோ 3:22, 10:12-13
உலக மேன்மைக்கான எண்ணம் நம்மை உலகத்தோடு கொண்டு போய் விடும். மத் 6:21
அவருக்கு வேண்டியது தாழ்மையான இருதயம் மாத்திரமே. சங் 138:6
பூமிக்கானவைகள் அல்ல - மேலானவைகளை (பரலோகத்தில் உள்ளவைகளை) நாடுவோம் (கொலோ 3:1)
ஒருவரிடமும் எந்த வேற்றுமையையும் காண்பிக்காமல் அன்பை மாத்திரமே வெளிபடுத்துவோம். யோ 15:17
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக