*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
பரலோகத்தில் வாசம் செய்யும் தேவனின் கிருபை நம்மை இன்னும் அரவணைக்கட்டும்.
தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் (லூக் 18:14) என்கிற வசனத்தை படித்துவிட்டு தான் உயர்த்தபடவேண்டும் என்பதற்காக மழுங்கி மழுங்கி பேசுவதும், கூழ் கும்பிடு போடுவதும் அரசியல் வாதிகளுக்கு இணையாக கிறிஸ்தவர்கள் வேஷம் போடுவது அதிகமாகிவிட்டது.
மனுஷனை ஏமாற்றலாம் இருதயத்தை ஆராய்கிற தேவனுக்கு தெரியாதா என்ன? (தானி 5:22, 2நாள 6:31)
வந்தனம் செய்ய கை குலுக்க நீட்டுபவரிடம் சரீரத்தில் எந்த அசைவையும் காட்டாமல் உட்கார்ந்த படியே தன் கரத்தை மாத்திரம் கடமைக்கென்று நீட்டுபவர்கள் பெருகி விட்ட இந்த மாய்மால காலத்தில் - உத்தமமாய் தன்னை தானே தாழ்த்தி மற்றவர்களை கனம் பண்ணும் உண்மையான தாழ்மையை ஒருவருக்கு ஒருவர் செலுத்துவதில் முந்திக்கொள்வோம். (யாக் 4:10)
அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை. 1சாமு 2:9
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக