வெள்ளி, 4 செப்டம்பர், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 04 Sep 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

By : Eddy Joel Silsbee

 

பிதாவாகிய தேவன் நம் ஒவ்வொருவரையும் இன்னும் பரிசுத்தப்படுத்துவாராக.

 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ் பழமொழி. ஆனால், அகத்தில் உள்ளத்தை வெளியே காட்டாமல் புன்முறுவலோடு இருக்க இந்த காலங்களில் எல்லோரும் பழகி விட்டோம் !!

 

சிறு பிள்ளைகள் கூட அதற்கு பயிற்சி பெற்றுக்கொள்கிறார்கள்!

 

இதன் விளைவு – சமுதாய சீர்கேடு.

 

ஆம், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் தன்மை அதிகமாகிப்போனது.

 

உண்மையையே பேசும் பக்குவம் மாறிவிட்டது. புன்முறுவலோடு எல்லோரிடமும் சிரித்து பேசினாலும், பலருடைய உள்ளமோ கொடூர குணத்தினாலும் பழைய கசப்பினாலும் கோர சிந்தையிலும் நிறைந்து இருக்கிறது.

 

நேருக்கு நேர் முகத்திற்கு முகம் தீமையை எடுத்து சொல்லாமல் சிரித்து சிரித்து பேசி விட்டு – பின்னர் தவறாக விமர்சிப்பது “கபடு உள்ளம்”

 

கபட நாவை தேவன் வெறுக்கிறார். அப்படிப்பட்ட எண்ணம் மரணத்தை வருவிக்கும் என்று வேதம் சொல்கிறது (ரோமர் 1:30-32, லேவி 19:16)

 

உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லை என்றும் சொல்ல வேண்டும். மறைக்க வேண்டிய அவசியமில்லை. யாக் 5:12

 

*Eddy Joel Silsbee*

Preacher – The Churches of Christ

Teacher – World Bible School

WhatsApp # +91 8144 77 6229

 

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக