*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
சகல நன்மையாலும் நம்மை தேவன் தொடர்ந்து நடத்துவாராக.
ஆண்டுகளையும், மாதங்களையும் புதுப்பித்துக்கொள்வது மனித கணக்கு.
தேவனோ ஆண்டுகளையும் நாட்களையும் குறிக்க பயன்படும் சூரியனையே படைத்தவர். ஆதி 1:16
நாட்களும், மாதங்களும், வருடங்களும் சூரியனின் சுழற்சி அடிப்படையில் வகுத்துக்கொள்ளப்பட்ட கணக்குகள். ஆதி 1:14
நம்முடைய கணக்குப்படி புதிய மாதத்திற்குள் நுழையும் போது தேவனுக்கு நன்றி சொல்கிறோம்.
இந்த வருடம் எவ்வளவு அதிகமாய் போராட்டம் நிறைந்து இருந்தாலும் அவ்வளவு அதிகமாய் நாம் தேவனை சார்ந்து இருந்திருக்கிறோம் !!
அல்லேலூயா.. அவருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.
ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாய் சகல வெற்றியோடு எல்லா நன்மைகளையும் பெற்று அவரையே சார்ந்து வாழ தேவன் நமக்கு கிருபை புரிவாராக (பிரசங்கி 3:10-11)
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக