சனி, 25 ஜூலை, 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 25 July 2020


*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee

ஆதியும் அந்தமுமான நம்முடைய இரட்சகர் இயேசுவின் நாமத்தில்  வாழ்த்துக்கள்.

வேதாகமத்தின் எண்களை ஆராய்ந்து வருகிறோம்.
இன்று எண் 10

10ம் எண் Totality / முழுமை / பூர்த்தியைக் குறிக்கிறது.

முழுமையான 10 பிரதான கட்டளைகள் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்டது. யாத் 20:1-17, உபா 5:6-21

மனுஷனுக்கு தேவன் 10விரல்களை கொடுத்து இருக்கிறார். ஒரு முழுமையான கால்குலேட்டர்!

நோவா 10தலைமுறையை முடித்து வைத்தார்!! ஆதி 5:1-32

இஸ்ரவேல் ஜனம் 10 வாதைகளுக்கு பின்னர் புறப்பட்டனர். யாத் 7:14-12:30

10ஐ அடிப்படையாய் வைத்து தசமபாகம் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது ! லேவி 27:30-33

10 கண்ணிகைகளின் உவமை(5+5) ! மத் 15:2-4

உலகின் பாவங்களை நீக்கும் ஆட்டுக்குட்டியான இயேசுவைப் போலவே, பஸ்கா ஆட்டுக்குட்டியும் 1 ஆம் மாதத்தின் 10 ஆம் நாள் (யாத் 12:3) தேர்ந்தெடுக்கப்பட்டது (யோ 12:27-33; 1 கொரி 5:7).

ரோமர்கள் - 10கொம்புகள் உள்ள மிருகம் என்று குறிப்பிடப்படுகிறது. வெளி 17.

*கவனிக்க* :  எண்களை ஆராய்ந்தது பைபிள் ஜோதிடத்திற்கு அல்ல !! 
தேவனின் செய்கைகளில் உள்ள எண்களின் ஒற்றுமையும் அர்த்தங்களையும் நாம் ஆச்சரியத்தோடு உணர்ந்து கொள்கிறோம் !!

இன்னும் 4நாளில் இந்த தொடர் முடிவிற்கு வரும்!

*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக