*தினசரி சிந்தனைக்கான வேத
துளி*
By : Eddy Joel Silsbee
நீதியின் தேவன் தாமே நம்மை இன்னும் அதிகமாய்
ஆசீர்வதிப்பாராக.
வேதாகமத்தின் எண்களை தொடர்ந்து ஆராய்ந்து
வருகிறோம்.
*இன்று எண் 7*
7 – முழுமையை மற்றும் நேர்த்தியைக்
குறிக்கிறது.
7ம் நாள் தேவன் தன்னுடைய எல்லா சிரிஷ்டிப்பையும்
முடித்து ஒய்ந்து இருந்தார். ஆதி 2:2
7 சுத்தமான ஜோடிகள் நோவாவின் பேழையில் சென்றது.
ஆதி 7:2-3
7-70 முறை மன்னிக்க சொன்னார் கிறிஸ்து...
அதாவது முழுமையாக, எப்போதும் மன்னிக்க சொன்னார். மத் 18:22
7ம் நாள் பரிசுத்தமாக்கபட்டது. ஆதி 2:3
இயேசு கிறிஸ்து ஓய்வு நாளுக்கும் ஆண்டவர்.
புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவ காலத்தில் நாம் 7ம் நாளை அல்ல – ஓய்வு நாளை அல்ல –
வாரத்தின் முதலாம் நாளை அநுசரிக்கிறோம்.
கூடார பண்டிகை – 7நாட்களுக்கு கொண்டாடினார்கள்.
யாத் 12:15, 19
7 நாட்கள் எரிகோவை சுற்றினார்கள்.
7ம் நாளில் 7 முறை சுற்றினார்கள்.
7 ஆசாரியர்கள் 7 எக்காளத்தை ஊதினார்கள்.
ஜனங்கள் ஏறெடுத்த துதியினால் அந்த சுவர்
விழுந்தது! யோசு 6:1-5
7 முறை யோர்தானில் முழுகி நாகமான் குஷ்டம்
சுத்தமானது. 2இரா 5:10
தேவத்துவம் (3) உலகத்தோடு (4)
வேலை செய்தபோது – 12 அப்போஸ்தலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
சிலுவை மரணத்திலிருந்து சபை உருவாகும்
வரை இருந்த நாட்கள் 7 வாரங்கள்.
கிறிஸ்தவனின் ஆயுதம் 7 (எபே 6:14-18)
7 பொன் விளக்குகள், 7 சபைகள்,
7 நட்சத்திரங்கள், 7 ஆவிகள், 7 முத்திரைகள், 7 எக்காளம், 7 தூதர்கள் என்று முழுமையாய்
வெளிபடுத்தல் புஸ்தகத்தில் பார்க்கமுடிகிறது.
உலகம் (6)+தேவன் (1) = முழுமை (7)
6(மனிதன்)+1(தேவன்)=7முழுமையான மன்னிப்பு
4(உலகம்)+3(தேவத்துவம்)= 7முழுமையான
மன்னிப்பு
2(பிரிவினை)+5(கிருபை)= 7முழுமையான மன்னிப்பு
பாலூட்டிகளும் பறவைகளின் கர்ப்பகாலத்தை
இங்கே பதிவிடுவது தேவனின் மகத்துவத்தை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள உதவும் என்று
நம்புகிறேன். என்ன ஓர் ஆச்சரியம் !!
மனிதன் 280
days ( 40 x 7)
சிங்கம் 98 (14 x
7)
ஆடுகள் 147 (21 x
7)
வாத்து 42 (6 x
7)
நாய் 63 (9 x
7)
கோழி 21 (3 x
7)
பூணைகள் 56 (8 x
7)
முயல் & எலி 28 ( 4x7)
சுண்டெலிகள் : 21 days (3 x 7)
** குறிப்பு : மிக மிக சுருக்கமாக பட்டியலிட்டிருக்கிறேன்.
எண் 7ஐ குறித்து மிக அதிகம் இன்னும் உண்டு!!
தேவன் தாமே நம்மை முழுமையாய் ஆசீர்வதிப்பாராக.
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக