வெள்ளி, 31 ஜனவரி, 2020

#742 - நமக்கு ஏன் இந்த வாழ்க்கை? தேவன் நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார்?

#742 - *நமக்கு ஏன் இந்த வாழ்க்கை? தேவன் நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார்?*

*பதில்*
நாம் அவருக்கென்று  உருவாக்கப்பட்டுள்ளோம் – 1 கொரி. 8:6

மனிதன் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால் அவரை போல வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் –

நம் வாழ்க்கை அவருக்கு சொந்தமானது - எசேக்கியேல் 18: 4

அவருக்காக உருவாக்கப்பட்டது - கொலோசெயர் 1: 16-17; ரோமர் 11:36

துன்மார்க்கரும் தேவனுக்கு உரியவர் - நீதிமொழிகள் 16: 4

தேவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் - பிரசங்கி 12: 13-14

அவரை துதிக்க படைக்கப்பட்டிருக்கிறோம் – ஏசா. 43:21

அவரை நாம் தொழுது கொள்ள வேண்டும் - 1சாமு. 12:24, 1 இரா. 2:4,  யோசு. 24:14, சங். 86:11.

நாம் ஒவ்வொருவரும் நம் பங்கைச் செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். - பிலி. 2:12-13.

தேவன் தமது சொந்த குமாரனை இவ்வுலகத்திற்கு அனுப்பி அவரை நம் பாவங்களுக்காக பலியாக்கினார். அதன் நிமித்தம் நாம் இரட்சிப்பிற்கென்று அழைக்கப்படுகிறோம். அந்த இரட்சிப்பைப் பெற நாம் முதலாவது தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, மனந்திரும்பி, அறிக்கையிட்டு, *பாவமன்னிப்பிற்கென்று* ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்போது இரட்சிப்பின் பாதையை நாம் துவங்குகிறோம். மாற்கு 16:16, அப். 2:38, 22:16

உங்கள் வாழ்க்கையில் அவரை முதலிடத்தில் வைக்க தேவன் விரும்புகிறார். மத்தேயு 22:37

நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக வேலை செய்ய வேண்டும் என்றும் ஓய்வு இருக்க வேண்டும் என்பதை அவர் அறிவார் (மாற்கு 6:31-32).

உங்கள் துணைக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அவர் புரிந்துகொள்கிறார் (1 கொரி. 7:32-25, எபே. 5:28).

பிள்ளைகளை தேவனுக்கு நேராக வழிநடத்தி வளர்க்க வேண்டும் (எபே. 6:1-4).

தேவனை முதலில் வைப்பதன் அர்த்தம் என்ன? வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.  கொலோ. 3:17

இதன் பொருள் நீங்கள் செய்யும் அனைத்திற்கும், தேவனின் ஆசீர்வாதம், அவருடைய அதிகாரம் இருக்க வேண்டும்.

2 பேது 1:3ன்படி வாழ்க்கை மற்றும் தேவபயத்திற்கு வேண்டிய யாவற்றையும் கொடுத்திருக்கிறார். எனவே நாம் வழிநடத்துதல் இல்லாமல் இல்லை. நாம் அவரை நேசிக்கும்போது, ​​அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவ்வாறு செய்கிறோம் யோவான் 14:15.

அயலானை நேசிக்க வேண்டும் – யாக். 2:8

பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும் – எபே. 4:17-24, ரோ. 13:13-14, பிலி. 4:8, எபே. 4:29

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக