சனி, 16 நவம்பர், 2019

#618 - எதுபோன்ற சூழ்நிலைகளில் வாழ்பவர்கள் கணவன் / மனைவி உயிரோடு இருக்கும் போதே, மறுமணம் (மற்றொரு திருமணம்) செய்து வாழ்வதற்கு வேதம் அனுமதிக்கின்றது.

#618  - *ஆண் / பெண் மறுமணம்*

உதாரனமாக.
1. கணவனை / மனைவியை இழந்தவர்கள்.

2. கணவன் / மனைவியால் கைவிடப்பட்டவர்கள்.

3. கணவன் / மனைவி இவர்களில் ஒருவரின் சந்தேகத்தால் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்பவர்கள்.

4. கணவன் / மனைவி ஆகிய இருவரின் சந்தேகத்தால் இருவரும் ஒருவரையொருவர்  பிரிந்து வாழ்பவர்கள்.

5. தவறான உறவுகளால் கணவன் / மனைவியை பிரிந்து வாழ்பவர்கள்.

6. தவறான பழக்கவழக்கங்களால் கணவனை / மனைவியை பிரிந்து வாழ்பவர்கள்.

இன்னும் அனேக காரியங்கள் உண்டு, இதில் எதுபோன்ற சூழ்நிலைகளில் வாழ்பவர்கள் கணவன் / மனைவி உயிரோடு இருக்கும் போதே, மறுமணம் (மற்றொரு திருமணம்) செய்து வாழ்வதற்கு வேதம் அனுமதிக்கின்றது.


*பதில்*
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் தன்மையில்லாத பட்சத்தில் விரிசல் எப்போதும் நிலைத்து நிற்கும்.

*அன்பு* என்ற மிக அசாதாரணமான *அடிப்படையான பண்பு* இருவருக்கும் இடையில் இருந்தால் :

1கொரி. 13:7
கணவணின் நடத்தை குறித்த எந்த சந்தேகமும் மனைவிக்கு வராது
மனைவியின் நடத்தை குறித்த எந்த சந்தேகமும் கணவணுக்கு வராது

1கொரி. 13:5
யாராவது ஒருவருக்கு அன்பு இருந்தாலே  -  ஒருவருக்கு ஒருவர் கோபத்தை விட்டு ஸ்நேகமாகி விடுவார்கள்.

இந்த உறவின் பந்தத்தில் இருக்கும் தேவனுடைய கட்டளையை இயேசு கிறிஸ்து உணர்த்தியபோது அவருடைய சீஷர்கள் – பயந்து போனார்கள். மத். 19:10

பிடிக்காத மனைவியை தள்ளிவிடவும் பிடிக்காத கணவனை தள்ளிவிடவும் முடியாது என்றால் – திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது என்றார்கள் – மத். 19:11

ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத். 19:9

வேறு எந்த காரணமும் – நிரந்தரமானதல்ல.

மனம் விட்டு ஒருவருக்கு ஒருவர் பேச வேண்டும்.

அல்லது சிறிது காலம் தள்ளியிருந்து ஒருவரின் அன்பை மற்றவர் உணர்ந்து கொள்ள முயற்சிக்கவேண்டும்.

ஜெபம் பண்ண போகிறேன் என்ற காரணத்திற்காக கூட இருவரும் சம்மதித்தாலேயன்றி பிரிந்து இருக்ககூடாது என்று வேதம் சொல்கிறது – 1கொரி. 7:5

வெளி உலகிற்காக மாத்திரமே தம்பதியினராக வாழ்ந்து - எத்தனையோ பேர் மனைவியாகவும் கணவனாகவும் வீட்டிற்குள் எந்த சம்பந்தமுமே இல்லாமல் வாழ்கிறார்கள் என்று அறியும் போது – மிக கொடிதான பிசாசின் பிடியில் குடும்பம் சிக்கியிருக்கிறது என்று தெளிவாக சொல்லலாம்.

புருஷனுக்கு விலகியிருக்கும் மனைவியும்; மனைவிக்கு விலகியிருக்கும் புருஷனும் தாங்கள் தேவனால் அல்ல – சாத்தானால் பிடிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும் – 1கொரி. 7:3-4

மனைவியை தள்ளி வைக்கும் கணவனோ அல்லது கணவனை தள்ளி வைப்பவரோ – மற்றவரை விபச்சாரம் செய்ய தூண்டுகிற பாவத்தில் ஈடுபடுகிறார்கள் – 1கொரி. 7:2

பைபிள் படிக்கிறேன், ஜெபத்தில் இருக்கிறேன், உபவாசத்தில் இருக்கிறேன், பொருத்தனையில் இருக்கிறேன் என்று வேதாகமத்தையே காரணமாக்கி குடும்பத்தை பிசாசு சீரழித்துக்கொண்டிருப்பதை கணவனும் மணைவியும் அறிந்து உண்மையான விசுவாசிகளாய் தன் மனைவியின் மீதும் தன் கணவன் மீதும் அன்பு செலுத்தி தங்கள் விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்து இருந்தால் கர்த்தருடைய தயையை பெற்று ஆசீர்வாதத்தை சுதந்தரித்து கொள்ளமுடியும் – நீதி. 18:22
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக