இந்த வார்த்தை உண்மையுள்ளது. தேவனிடத்தில்
விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ
இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.இவைகளே
நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள் - தீத்து 3:8
இந்த வசனத்தில். *இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமானவைகள்* என்று
குறிப்பிட்டி௫க்கிறது *அது எவை* என்று சொல்லுங்கள்
*பதில்*
கீழே உள்ளவைகளை வாசிக்கவும்:
துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய
ஆயத்தமாயிருக்கவும் – தீத்து 3:1
ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொருமையுள்ளவர்களாய்
எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்க வேண்டும் – தீத்து
3:2
ஏனெனில் முற்காலத்திலே
நாமும் புத்தியீனரும்,
கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும்,
பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.
– தீத்து 3:3
நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே,
மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும்
நம்மை இரட்சித்தார். – தீத்து 3:4-5
தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற
நம்பிக்கையின்படி சுதந்தரராகப்பட்டிருக்கிறோம்
– தீத்து
3:6
அவர் நமது இரட்சகராகிய இயேசு
கிறிஸ்து மூலமாய், அந்தப்
பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் *பொழிந்தருளினார்*. – தீத்து
3:7
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக