வெள்ளி, 1 நவம்பர், 2019

#593 - பின்னே ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்று சொல்லி; லூக்கா 19:23 இந்த வசனத்தை விளக்கவும்.

#593  - *பின்னே ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்று சொல்லி; லூக்கா 19:23  இந்த வசனத்தை விளக்கவும்*.

*பதில்*
வட்டிக்கு வட்டி அல்லது கடன் வாங்குவது வேதத்தில் தடை செய்யப்பட்டவை.  (யாத். 22: 25-27; உபா. 23: 19-20).

ஒரு சதவீத வட்டிக்கு குறைந்த விகிதம் கூட அனுமதிக்கப்படவில்லை, (நெகே. 5: 11).

இந்த வேலைக்காரன் ஏற்கனவே இரண்டு பொய்களைச் சொல்லியிருக்கிறான்.

முதலாவது - அவர் எஜமானர் கடுமையான மனிதர் என்று கூறினார்.
கர்த்தர் இரக்கமுள்ளவர், கிருபையுள்ளவர் என்பது வேதம் சொல்கிறது.

அடுத்து அவர் விதைக்காத இடத்தில் அறுவடை செய்கிறவர் என்பது தன் எஜமானரை அவன் ஒரு திருடன் என்று சொல்ல முனைகிறான்.

ஆகவே எஜமானர் அவனிடம் – காயத்தோடு அவமானத்தை ஏன் சேர்க்கவில்லை என்று கேட்கிறார்?  அதாவது - வட்டிக்கு பணத்தை கடனாகக் கொடுத்திருந்தால் என் எஜமானன் "பணமுதலை அல்லது பண கொள்ளைகாரன் அல்லது  பெரும் பண ஆசைக்காரன்" என்றும் அழைத்திருக்கலாமே என்று சொல்ல வருகிறார்!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக