வெள்ளி, 11 அக்டோபர், 2019

#556 - பொய்யால் உண்டாகும் தீமை என்ன / அல்லது தண்டனை என்ன விளக்கம் கொடுங்கள் பிரதர்...

#556 - *முதல் பாவம் முதல் பொய் மூலம் இந்த உலகத்திற்கு வந்தது*..

ஆகையால்  என் கேள்வி - பொய்யை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது
பொய்யால் உண்டாகும் தீமை என்ன / அல்லது தண்டனை என்ன விளக்கம் கொடுங்கள் பிரதர்...


*பதில்*
பொய் சொல்வதை கர்த்தர் வெறுக்கிறார் என்பதை அவர் வெறுக்கும் பட்டியலில் நாம் காணமுடியும். நீதி 6: 16-19.

மேலும் அந்த பட்டியலில் பொய்நாவு என்றும் பொய்சாட்சி என்றும் இரண்டு முறை பொய் வருவதை கவனிக்கவும்.

பொய்யை ஏன் தேவன் வெறுக்கிறார்?

அவர் சத்தியத்தின் தேவன். அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர் - உபாகமம் 32: 4.

தேவன் பொய் சொல்லாதவர் - தீத்து 1: 3.

பொய் பேசுகிறவர்களை அழிக்கிறார்; இரத்தப் பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார். (சங்கீதம் 5: 6).

கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை என்றார் சங்கீதக்காரர் 101: 7

எனவே, கிறிஸ்தவர்கள் உண்மையுள்ளவர்களாகக் இருக்க விரும்பினால், அவர்கள் பொய்யில் ஈடுபட முடியாது.

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,- கொலோசெயர் 3: 9.

அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.- எபேசியர் 4:25

ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சி சொல்ல எழும்பினால், வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.  அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணை செய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால், அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாய்த் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. - உபாகமம் 19: 16-19

ஒரு நபர் கொலை செய்யப்பட்டதாக பொய்யாக இன்னொருவர் மீது குற்றம் சாட்டுவது பொய் சொன்னவர் தலையில் மரண தண்டனையை கொண்டு வரக்கூடும்.

பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. நீதி 19: 5

பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான் நீதி 19: 9

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், *பொய்யர்* அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். வெளி 21: 8.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :

*Q&A Book ஆர்டர் செய்ய* :

வலைதளம் : 

YouTube “வேதம் அறிவோம்” :

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக