#554 - *கிறிஸ்தவர்கள் யோகா செய்யலாமா?*
*பதில்*
சிக்கலான கேள்வி தான்.
ஏனெனில் யோகா இரண்டு வெவ்வேறு வழிகளில் பார்க்கப்படவேண்டும்.
யோகா இந்தியாவில் தோன்றியது மற்றும் இந்து மதத்துடன் வலுவாக இணைக்கப்பட்டது.
இது பின்னர் புத்த மதத்தாலும் சமண மதத்தாலும் பயன்படுத்தப்பட்டது.
யோகா செய்பவர் இறுதியில் ஒரு சரியான ஆன்மீக நுண்ணறிவு மற்றும் அமைதியின் நிலையை அடையவேண்டும் என்ற நோக்கில் செய்யப்படுவது யோகாவின் குறிக்கோள்.
அஷ்டாங்கா என்று சொல்லப்படும் யோகாவின் எட்டு படிகளை கவனிக்கவும்:
1) யாமா - அதாவது "கட்டுப்பாடு"- வன்முறை, பொய், திருடுதல், பாலியல் உறவு மற்றும் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்திலிருந்து விலகி இருப்பது;
2) நியாமா - அதாவது" கடைபிடிக்கப்படுதல் "- தூய்மை, மனநிறைவு, சகிப்புத்தன்மை, சுயபரிசோதனை மற்றும் தெய்வ சிந்தையாக இருப்பது.
3) ஆசனம் - உடல் பயிற்சிகள்;
4) பிராணயாமா - சுவாச உத்திகள்;
5) ப்ரத்யஹாரா - தியானத்திற்கான பயிற்சி, “புலன்களிலிருந்து மனதைத் திரும்பப் பெறுதல்” என்று விவரிக்கப்படுகிறது;
6) தாரணா - செறிவு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு கருத்தின் மீது அல்லது ஒரு தீர்மானத்தின் மீது மனதைப் பற்றிப் பிடிக்கக்கூடியது;
7) தியானா - தியானம், ஒரு விஷயத்தில் (அல்லது வெறுமையாக) காலவரையின்றி கவனம் செலுத்தும் திறன்;
8) சமாதி - சமாதி என்பது தியானத்தின் விஷயத்தில் ஒற்றுமை. யோகாவின் எட்டாவது பயிற்சியில், தியானத்தின் ஈடுபடுபவருக்கும், தியானத்தின் செயலுக்கும், தியானத்தின் விஷயத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லாதிருக்கும்.
சமாதி என்பது ஒருவரின் மனம் சிந்திக்கிற எந்தவொரு விஷயத்திலும் உறிஞ்சப்படுகையில், மனம் அதன் சொந்த அடையாளத்தின் உணர்வை இழக்கிறது. சிந்தனையாளர், சிந்தனை செயல்முறை மற்றும் சிந்தனை விஷயத்துடன் இணைகிறது. சமாதி சுயத்தின் அத்தியாவசிய தன்மையை உணர்தல்.
யோகா வகுப்புகள் பொதுவாக 3 வது, 4 வது மற்றும் 5 வது படிகள் வரைக்கும் அதிக கவனம் செலுத்துவார்கள்.
யோகா ஒரு மதம் அல்ல என்று மக்கள் மீண்டும் மீண்டும் கூறுவதை நான் காண்கிறேன்.
ஆனால் யோகா ஒரு தார்மீக அமைப்பை கற்பிக்கிறது (படிகள் 1 & 2) மற்றும் இந்து மதத்தின் அம்சங்கள் உள்ளன.
கவனிக்கவேண்டிய காரியம் என்னவென்றால், இது எல்லா மதங்களுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று அவர்கள் சொல்வது இந்து மதத்தின் ஒரு அம்சமாகும்.
இந்து மதத்தில், "பிரார்த்தனையானது காலவரையின்றி மீண்டும் மீண்டும் செய்யப்படும் மந்திரங்களை அமைதியாக உச்சரிப்பதை கொண்டுள்ளது.
இந்த வகை ஸ்லோகங்கள் மன செறிவுக்கான ஒரு உதவி, பாதுகாப்பு, வாக்குறுதியை நிறைவேற்றுதல் அல்லது விரும்பிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்வார்கள்.
யோகா பயிற்சிகளால் இம்மாதிரியான ஸ்லோகங்களை உச்சரிக்க உந்தப்படுவதால் இம்மாதிரியான தந்திரங்களிலிருந்து கிறிஸ்தவர்கள் விலகியிருக்க வேண்டும்.
இந்து கொள்கையின் மூல / இறுதி குறிக்கோள், ஒருவர் தான் கடவுளின் ஒரு பகுதி என்றும் தான் கடவுளாக மாறுவதையும் உணர வேண்டும் என்பது. [Transcendental Meditation, page #269].
யோகாவானது பெரும்பாலும் அதன் மதக் கருத்துக்களிலிருந்து அகற்றப்பட்டு, நெகிழ்வுத்தன்மை, வலிமை, சமநிலை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட சுவாசத்தை வலியுறுத்தும் பயிற்சிகளின் தொகுப்பாக மட்டுமே பயன்படுத்தப்படும் பட்சத்தில் (அதாவது மேலே பட்டியலிடப்பட்டுள்ள படிகள் 3 மற்றும் 4) அதில் எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் யோகா கற்றுக்கொள்ளும் போது தங்களை அறியாலேயே இந்துக்களின் ஸ்லோகங்களை படிக்கவும் உச்சரிக்கவும் அவசியப்படுகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. "(1தீமோ. 4: 7-8).
உடற்பயிற்சியானது உடலுக்கு நன்மை பயக்கும்.
யோகாவில் உடற்பயிற்சியும் அடங்கும் என்பதும் நமக்குத் தெரியும்.
ஆனால் யோகாவின் மத அம்சங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்காதீர்கள்.
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 1கொரி. 3:16
இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன? - 1கொரி. 10:28-29
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். கொலோ. 3:2
நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை. ரோ. 12:1
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக