வியாழன், 17 அக்டோபர், 2019

#553 - ஆதாமுடைய டி.என்.ஏ (DNA) என்ன?

# 553 -  *ஆதாமுடைய டி.என்.ஏ (DNA) என்ன?*

* பதில் *

(_ஆங்கிலத்தில் பதிவிட்ட இந்த பதிவை தமிழாக்கம் செய்து உதவிய நம் உறுப்பினர் அருமை சகோதரர் திருநாவுக்கரசு அவருக்கு மனமார்ந்த நன்றிகள்_)

டி.என்.ஏ என்றால் - டியோக்ஸிரிபொனூக்ளிக் அமிலம் (டி.என்.ஏ) என்பது ஒரு மூலக்கூறு ஆகும், இது ஒவ்வொரு உயிரினத்தையும் தனித்துவமாக்கும் உயிரியல் வழிமுறைகளைக் கொண்டுள்ளது.  டி.என்.ஏ, அதில் உள்ள வழிமுறைகளுடன், வயதுவந்த உயிரினங்களிலிருந்து இனப்பெருக்கத்தின் போது அவற்றின் சந்ததியினருக்கு அனுப்பப்படுகிறது.

டி.என்.ஏ நியூக்ளியோடைடுகள் எனப்படும் வேதியியல் கட்டுமானத் தொகுதிகளால் ஆனது.  இந்த கட்டுமானத் தொகுதிகள் மூன்று பகுதிகளால் ஆனவை: ஒரு பாஸ்பேட் குழு, ஒரு சர்க்கரை குழு மற்றும் நான்கு வகையான நைட்ரஜன் தளங்களில் ஒன்று.  டி.என்.ஏவின் ஒரு இழையை உருவாக்க, நியூக்ளியோடைடுகள் சங்கிலிகளாக இணைக்கப்படுகின்றன, பாஸ்பேட் மற்றும் சர்க்கரை குழுக்கள் மாறி மாறி வருகின்றன.

ஆதாம் - பூமியிலிருந்து உருவாக்கப்பட்ட முதல் மனிதர் - தோற்றத்தின் சுழற்சியைத் தொடங்குவதைத் தவிர அவரது மூதாதையரின் எந்த தகவலையும் அவர் தனது உடலில் கொண்டு இருக்க மாட்டார் (ஆதி 2: 7)

மனிதர்களுக்கு 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.  அந்த ஜோடிகளில் ஒன்று, பாலியல் குரோமோசோம்கள் என அழைக்கப்படுகிறது. இது பெண்கள் சரீரத்தில் 2 (இரண்டு) X-குரோமோசோம்களையும் ஆண்கள் சரீரத்தில் 1 (ஒரு) எக்ஸ் (X) குரோமோசோம் மற்றும் 1 (ஒரு) Y-குரோமோசோமையும் கொண்டுள்ளது.

பெண்கள் தங்கள் சரீரத்தில் பெறும் 2 (இரண்டு) Xகுரோமோசோம்களில் ஒன்றை தங்கள் தாயிடமிருந்தும், மற்றொரு எக்ஸ்-குரோமோசோமை தங்கள் தந்தையிடமிருந்து பெறுகிறார்கள்.

ஆண்கள் தங்கள் சரீரத்தில் Xஐ தாயிடமிருந்தும் Yஐ தந்தையிடமிருந்து  பெறுகிறார்கள்.

எனவே, ஒய்-குரோமோசோம் நேரடியாக தந்தையிடமிருந்து மகனுக்கு அனுப்பப்படுகிறது.  இதன் காரணமாக, விஞ்ஞானிகள் ஆண் வம்சாவளியைக் கண்டுபிடிக்க முடிகிறது.

"ஒய்-குரோமோசோமல் ஆதாம்" மற்றும் "மைட்டோகாண்ட்ரியல் ஏவாள்" ஆகியவை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகளாகும். ஆகவே தான் இன்று உயிருடன் இருக்கும் எந்த மனிதனும் ஒரு ஆணிடமிருந்து வந்தவர் என்றும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒரு பெண்ணிலிருந்து வந்தவர்கள் என்றும் நிரூபணம் ஆகிறது.

1995 ஆம் ஆண்டில், சயின்ஸ் இதழ் ஒரு ஆய்வின் முடிவுகளை வெளியிட்டது.  இதில் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த 38 ஆண்களிடமிருந்து மனித ஒய்-குரோமோசோமின் ஒரு பகுதி மாறுபாட்டிற்காக பகுப்பாய்வு செய்யப்பட்டது (டோரிட், ஆர்.எல்., ஆகாஷி, எச். மற்றும் கில்பர்ட், டபிள்யூ. 1995)

இன்று உயிருடன் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் உண்மையில் "ஒய்-குரோமோசோமல் ஆதாம்" என்று விஞ்ஞானிகள் குறிப்பிடும் ஒரு மனிதரிடமிருந்து வந்தவர்கள் என்பதை ஊர்ஜீதப்படுத்தினார்கள்.

மைட்டோகாண்ட்ரியல் ஏவாள் - அதை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது.  ஒய்-குரோமோசோம்கள் தந்தையிடமிருந்து மகனுக்கு மட்டுமே அனுப்பப்படுகின்றன. மைட்டோகாண்ட்ரியல்-டி.என்.ஏ தாயிடமிருந்து மகள் மற்றும் மகன் இருவருக்கும் அனுப்பப்படுகிறது.

ஒருபோதும் தந்தை மூலமாக அல்லாமல் மைட்டோகாண்ட்ரியல்-டி.என்.ஏ தாயால் மட்டுமே அனுப்பப்படுவதால், பரம்பரையானது தாய்வழியில் வருகிறது.

“ஆகவே தான் ஏவாள் எல்லா ஜீவன்களுக்கும் தாயாக இருப்பதை வசனமும் சொல்கிறது - ஆதியாகமம் 3:20.

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக