திங்கள், 30 செப்டம்பர், 2019

சபை கூடி வரும் போது கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுவதற்கு முன்போ அல்லது பின்போ ஒருவருக்கொருவர் கால்களை கழுவ வேண்டுமா?

Bro:Ariyel Barnabas
Surampatti, Erode
பகுதி: 60 ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுது கொள்ளுதல் (கர்த்தருடைய பந்தி)

சபை கூடி வரும் போது கர்த்தருடைய பந்தியில் பங்கு  பெறுவதற்கு முன்போ  அல்லது பின்போ   ஒருவருக்கொருவர்  கால்களை  கழுவ வேண்டுமா?

தேவனை ஆவியோடும் சத்தியத்தோடும் எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தில் கர்த்தருடைய பந்தியில் எப்படி பங்கு பெற வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம்

கர்த்தருடைய பந்தி என்பது இரவில் மாத்திரம் பங்கு பெற வேண்டும் என்பது தவறான உபதேசம் என்பதை வேத வசனங்களை கொண்டு கற்றுக் கொண்டு இருக்கிறோம்

இன்றைக்கு அநேகர் கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறவதற்கு முன்போ  அல்லது பின்போ  ஒருவருடைய கால்களை மற்றொருவர் கழுவ வேண்டும் என்கிறார்கள்
அப்படி செய்ய வேண்டும் என்று தேவன் நமக்கு கட்டளையிட்டு இருக்கிறாரா?

இயேசு கிறிஸ்து சிலுவைக்கு போவதற்கு முன்பு சீஷர்களுடைய கால்களை கழுவினார்
யோவா 13:4 போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,
யோவா 13:5 பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.

இதை காண்பித்து தான் அநேகர் இயேசு கிறிஸ்துவை போல நாமும் செய்ய வேண்டும் என்கிறார்கள்
யோவா13:15 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.

இஸ்ரவேலர்களுக்கு சில பாரம்பரியங்கள் இருந்தது

இஸ்ரவேலர்கள் யாரை மதிக்கிறார்களோ அவர்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை அவர்கள் செயல் பாடுகளை வைத்து  தெரிந்து கொள்ளலாம்
லூக் 7:44 ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர்த் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
லூக் 7:45 நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.
லூக் 7:46 நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.

எப்படி கனம் பண்ணுவார்கள்?
1)வீட்டிற்கு வருகிறவர்களுக்கு கால்களை கழுவ தண்ணீர் கொடுப்பார்கள்
2) அவர்களை முத்தம் செய்வார்கள்
3)அவர்கள் தலையில்  (ஒலிவ) எண்ணெய் பூசுவார்கள்

(பரிசேயனாகிய சீமோன் இயேசு கிறிஸ்துவை வீட்டிற்கு அழைத்தாலும் அவரை கனம் பண்ண வில்லை என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்)

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுக்கு அவருடைய ஊழிய நாட்களில் மனத்தாழ்மை என்பது இல்லாமல் இருந்தது

அப்போஸ்தலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தான் பெரியவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்

செபெதேயுவின் குமார்களாகிய யாக்கோபும் யோவானும் அவருடைய தாயாரை கூட்டிக்கொண்டு வந்து அவர்களுடைய தாயின் மூலம்  இயேசு கிறிஸ்துவிடம் ஒரு விண்ணப்பம் வைத்தார்கள்
மத் 20:20 அப்பொழுது, செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.
மத் 20:21அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்றாள்.

என்னுடைய இரண்டு குமாரர்கள் மாத்திரம் தான் இயேசு கிறிஸ்துவுக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உட்கார இடம் வேண்டும் என்று  கேட்டாள்

யோவானும் யாக்கோபும் தங்கள் தான் பெரியவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள் 

இதை கேட்ட மற்ற அபோஸ்தலர்களுக்கு என்னவாயிற்று?
மத் 20:24 மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள்.

இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களுடைய பெலவீனத்தை  புரிந்து கொண்டு அவர்களை கிட்ட வர செய்து அவர்களை கடிந்து கொண்டார்
மத் 20:25 அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

இறுமாப்பாய் ஆளுவதுவும் கடினமாய் அதிகாரம் செலுத்துவதும் அது புறஜாதிகளுடைய வேலை அது தேவனுடைய பிள்ளைகளுக்கு உரியது இல்லை என்றார்

அப்போஸ்தலர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து  விரும்பினார்?
மத் 20:26 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.

அப்போஸ்தர்களுக்குள்ளே இந்த மேட்டிமையான  சிந்தை இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களின் ஆரம்பம் முதல் இந்த பிரச்சனையும்  வாக்குவாதம் இருந்தது
லூக் 9:46 பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று.

இயேசு கிறிஸ்து இந்த முறை ஒரு சிறு பிள்ளையை தமதருகே நிறுத்தி  அவர்களுக்கு புத்தி சொன்னார்  
லூக் 9:47 இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி,

ஒரு சிறு பிள்ளையைப் போல நீங்கள் மனத்  தாழ்மையுள்ளவராக இருக்க வேண்டும் என்று அப்போஸ்தலர்களுக்கு  போதித்தார்
லூக் 9:48 அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.

இயேசு கிறிஸ்துவையும் அவருடைய உபதேசங்களை  ஏற்றுக் கொள்ளுவதற்கு அவர்கள் இருதயம் சிறு பிள்ளைகளின் இருதயத்தைப் போல தாழ்மையான கற்றுக் கொள்ள கூடிய இருதயம் இருக்க வேண்டும்

இயேசு கிறிஸ்து கட்டிக்கொடுக்கப்பட்ட அன்று ராத்திரியில் அப்போஸ்தலர்களுக்குள்ளே கர்த்தருடைய பந்தியை அவர் ஏற்படுத்தின பின்பு அவர்களுக்குள்ளே மறுபடியும் எவன் பெரியவன் என்ற வாக்குவாதம்  உண்டாயிற்று
லூக் 22:24 அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.

இயேசு கிறிஸ்து அவர்களை  மறுபடியும் கடிந்து கொண்டார்
லூக் 22:25 அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.
லூக் 22:26 உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.

அப்போஸ்தலர்கள் எல்லாரும்  புறஜாதிகளின் ராஜாக்களைப்போல ஆளுகிறவர்களாகவும் அதிகாரம் செலுத்துகிறவர்களாகவும்  இருக்க கூடாது  என்றும்   அவர்கள் மனத் தாழ்மையுடையவர்களாய்     பெரியவன் சிறியவனைப் போலவும் தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து அவர்களுக்கு போதித்தார்

இயேசு கிறிஸ்து சிலுவைக்கு போவதற்கு முன்பு  அப்போஸ்தலர்களின்  மேட்டிமையான சிந்தையை  சரி செய்ய   எண்ணி  தன்னையே  ஒரு மாதிரியாக காண்பித்தார்

இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களின்  நடுவில் அவர்  ஒரு பணிவிடைக்காரராய் இருந்தார்
லூக் 22:27 பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சி  தான் யோவான் 13ம் அதிகாரத்தில் தொடர்ந்து வாசிக்கிறோம்

இயேசு தன்னை பணிவிடைக்காரன் என்று சொன்னதோடு மாத்திரம் அல்ல அதை அவர் செய்தும்  காண்பித்தார்
யோவா 13:4 போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,
யோவா 13:5 பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.

இந்த காட்சியை உங்கள் மனதில் கொண்டு வந்து சிந்தித்து பாருங்கள்
உலகத்தை சிருஷ்டித்த சிருஷ்டிகர் மனுஷனுடைய(அப்போஸ்தலர்களுடைய)  கால்களை கழுவி துடைக்கும் போது அவர் எவ்வளவு மனத்  தாழ்மையுள்ளவராக இருக்கிறார் என்பதை கவனியுங்கள்

அப்போஸ்தலர்களுடைய பாதங்களை அவர் கழுவி துடைக்கும் போது  அவர்கள் தங்கள் இருதயத்தில் இருந்த மேட்டிமையான சிந்தைகளை  எல்லாம்   துடைத்து எறிந்து இருப்பார்கள் 

நான் தான் பெரியவன் என்று சொல்லிக்கொண்டு இருந்த சீஷர்களுக்கு இயேசு கிறிஸ்து செய்த செயல்  எவ்வளவு பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கும் என்று யோசித்து பாருங்கள்

சீமோன் பேதுரு அருகே இயேசு கிறிஸ்து வந்த போது அவர் தன்னுடைய கால்களை தொடுவதற்கு அவர் அனுமதிக்கவில்லை
யோவா 13:6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.
யோவா 13:7 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.

கிறிஸ்து சொன்னதைப் போல  பின்னாளில் பேதுரு உணர்ந்து கொண்டார்
1 பேதுரு 1:13 ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.

ஆனாலும் இயேசு கிறிஸ்து தன்னுடைய வேலையை செய்ய தடை பண்ண வேண்டாம் என்று  பேதுருவை கடிந்து கொண்டார்
யோவா 13:8 பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.

பேதுரு அவர் கடிந்து கொள்ளுதலை தாழ்மையோடு ஏற்றுக் கொண்டார்
யோவா13:9 அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.

இயேசு கிறிஸ்து யாக்கோபு யோவான் மற்றும் யூதாஸ் காரியோத்  ஆகியோரின் பாதங்களை கழுவி துடைக்கும் போது அவர்கள் மன நிலை எப்படி இருந்து இருக்கும்?

அப்போஸ்தலர்கள் எல்லாரிடமும் (யூதாஸ் காரியோத் உட்பட) இயேசு கிறிஸ்து முடிவு பரியந்தம் அன்பு வைத்து இருந்தார்

அப்போஸ்தலருடைய பாதங்களை கழுவி துடைத்து  வந்து அமர்ந்த  பிறகு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் மரண பரியந்தம் அவர்கள் மறந்து இருக்க மாட்டார்கள்
யோவா13:12 அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு. தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
யோவா13:13 நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
யோவா13:14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.

இந்த சம்பவத்திற்கு  பிறகு அப்போஸ்தலர்கள் நான் தான் பெரியவன் என்று சொல்லாமல்  தங்களை முழுவதும்  தாழ்த்திக் கொண்டார்கள்
1 கொரி 4:9 எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.
1கொரி 4:13 தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.

ஆகையால் கால்களை கழுவுவதற்கு கர்த்தருடைய பந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களுக்கு கற்றுக் கொடுத்த மனத் தாழ்மையை நாமும் கற்றுக் கொள்ள வேண்டும்

எல்லாருக்கும் முன்பாக நாம் பணிவிடைக்காரனைப் போல்  மனத்  தாழ்மையாக மரண பரியந்தம்  நடந்து கொள்ள  வேண்டும்

கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கர்த்தருடைய பந்தியை பற்றிக் கற்றுக் கொள்வோம்

 நீங்கள் ஈரோட்டில் இருந்தால் எங்களோடு தேவனை ஆவியோடும் சத்தியத்தோடும்  தொழுது கொள்ள அன்போடு அழைக்கிறோம்

CHURCH Of CHRIST
Surampatti, Erode

ஆராதனை நேரம்
ஞாயிறு காலை
9:30 to 11:30 AM
7:00 to 8:00 PM
வேத வகுப்பு
வியாழன் மாலை
7:00 to 8:00 PM

தேவனுடைய சத்தியங்களை உங்கள் வீடுகளில்  கற்றுக்கொள்ள விரும்பினால் எங்களை அழைக்கவும்

தேவனுடைய சத்தியங்களை தொடர்ந்து வாட்ஸ் ஆப் ல் பெற 9025776966 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பவும்
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக