திங்கள், 30 செப்டம்பர், 2019

#519 - வேதாகமம் விஞ்ஞானத்தை குறித்து என்ன சொல்லுகிறது.?

#519 - *வேதாகமம் விஞ்ஞானத்தை குறித்து என்ன சொல்லுகிறது.?*

*பதில்*
உலகம் கடவுளிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதம் என்று தானியேலில் பலமுறை குறிப்புகள் உள்ளன.

அதேபோல், கொலோசெயர் 2: 3 கிறிஸ்துவைப் பற்றி பேசுகிறது, " அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.".

விஞ்ஞானம் என்ற வார்த்தையை வேதாகமம் பயன்படுத்தவில்லை.  இருப்பினும், அறிவையும் ஞானத்தையும் பெறுவது பற்றி வேதத்தில் நிறைய விஷயங்கள் உள்ளன.

விஷயங்களை மறைப்பது தேவ மகிமை, ஆனால் ராஜாக்களின் மகிமை விஷயங்களைத் தேடுவது. நீதிமொழிகள் 25: 2

சகலவித வினோதமான வேலையை நல்ல திறமையுடன் செய்யும்படி கலைநயத்தோடு செய்யும்படி தேவனுடைய ஆவியை கொடுத்தார் என்று வேதம் சொல்கிறது. யாத்திராகமம் 31: 1-5

சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். நீதிமொழிகள் 6: 6

விஞ்ஞானம் உட்பட எந்த வேலையாக இருந்தாலும் அதை தேவனுடைய அநுக்கிரகத்தாலே மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் அப்படிதான் பெற்றுக்கொள்ள முடிந்தது !!

ஆரம்ப கண்டுபிடிப்பு என்பது சரித்திரத்தில் அனைவரும் தேவமனிதராக தான் இருந்தார்கள்.

யாரும் உருவாக்கினவர்கள் அல்ல மாறாக கண்டுபிடித்தவர்கள் !!
தேவன் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடிக்கும் திறமையை தேவனிடத்திலிருந்து பெற்றார்கள் (1கொரி. 4:7)

வேதம் இல்லாமல் அறிவு இல்லை நீதி. 2:6-7

அடிக்கடி நான் படித்து ஆச்சரியப்படுகிற வசனம்:  எரே. 5:22 எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக *சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய* எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?

விஞ்ஞானம் அனைத்தும் வேதத்தில் இருக்கிறது.

அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.

அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.

அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.

அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும்.

அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.

அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.

தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.

இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.  யோபு  26:7-14

வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.  

சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

கோணலானதை நேராக்கக்கூடாது; குறைவானதை எண்ணிமுடியாது.

இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.

ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன்.

அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்.   பிரசங்கி 13-18

அவருடைய ஞானத்தை யாரால் சொல்லிமுடியும்? (சங். 147:5)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக