#469 - *ஞானஸ்நானம் எடுக்கும் போது புதிய பெயர் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதா?* என்னுடைய குடும்பத்தில் நான் மட்டுமே மனந்திரும்பியிருக்கிறேன் . please சொல்லுங்க
*பதில்* :
முதலாவது உங்கள் மனந்திரும்புதலுக்காக எங்கள் வாழ்த்துக்கள்.
கர்த்தருடைய வார்த்தையை கேட்டு, இயேசுவே தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து, மனந்திரும்பி, பாவ மன்னிப்புக்கென்று முற்றிலும் முழுகி ஞானஸ்நானம் எடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அதுவும் முதல் தலைமுறை கிறிஸ்தவனாக இருப்பதும் வாழ்வதும் பொிய சவால் தான். தேவன் தாமே உங்கள் இரட்சிப்பை கடைசி வரை காத்துக்கொள்ளும்படி உங்கள் விசுவாசத்தை பலக்க செய்து இன்னும் பெலப்படுத்தி நிலைநிறுத்துவாராக.
ஞானஸ்நானம் எடுப்பது உலகத்திற்காக அல்ல ஆத்துமாவிற்காக.
கிறிஸ்தவம் மதமல்ல.. மாறாக பரலோகம் போகும் மார்க்கத்தை தொிந்தெடுத்துள்ளீர்கள். பாவத்தை மன்னித்து பரலோகம் கொண்டு சேர்க்க இயேசுவே வழி என்பதை அறிந்ததால் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்துள்ளீர்கள் (யோ 14:6)
ஞானஸ்நானம் எடுத்த போது பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு ஈவாக கொடுக்கப்பட்டார் (அப். 2:38)
தேவனுடைய வார்த்தைக்கு மாறாக செயல்படும் போது தேவ வார்த்தைகள் நினைவில் உணர்த்தப்படும். பழைய மனுஷனை களைந்து போட்டு புதிய மனுஷனாக (புதிய எண்ணங்களோடு) மனந்திரும்பியதால் நடத்தப்படுகிறீர்கள். (2கொரி. 5:17)
உங்கள் பெயர் ஜெகன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஜெகன் என்றால் பலசாலி என்று பொருள். கிறிஸ்துவுக்குள் பலசாலியாக தேவன் உங்களை மாற்றுவார் என்று நம்புகிறேன்.
பெயர் மாற்றம் என்பது அவசியமும் அல்ல கட்டாயமும் அல்ல. இருதயத்தின் புது சிருஷ்டியே காரியம்.
முக்கியமாக நீங்கள் கிறிஸ்தவர் என்பதை உங்களது அரசாங்க பதிவுகளில் மாற்றுவது நம் நாட்டு சட்டப்படி அவசியம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக