#445 - *இயேசுவின் அப்பா அம்மா
அவருக்கு யூத முறைபடி வைத்த பெயர் (personal name) என்ன?*
அதாவது என்னுடைய அப்பா அம்மா
எனக்கு வைத்த பெயர் விஜயகுமார் , இந்த பெயர் எந்த நாட்டில் இருந்தாலும்
விஜயகுமார் என்றே அழைப்பர். Son of
victory என அழைக்க மாட்டார்கள்.
இயேசுவை (இது personal name இல்லை) மட்டும் பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கிறார்களே வேதத்திற்கு
முரணாக இல்லையா? விளக்கம் அளிக்கவும்.
*பதில்*
:
இயேசு
என்பது அவருக்கு வைக்கப்பட்ட பெயர். (மத். 1:25)
இம்மானுவேல்
என்பது அவருடைய தன்மையின் பெயர்.
இம்மானுவேல்
என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தம் (மத். 1:23)
கிறிஸ்து
என்ற கிரேக்க வார்த்தைக்கும்
மேசியா
என்ற எபிரேய வார்த்தைக்கும்
இரட்சகர்
அல்லது அபிஷேகம் செய்யப்பட்டவர் என்பதும் தமிழ் அர்த்தம் (அப். 17:3, 18:5, ஏசா. 61:1)
அவரின்
ஊர் பெயரைக் கொண்டு நசரேயன் என்றும் அவரை அழைத்தார்கள். (லூக்கா 4:34, யோ. 19:19,
யோ. 1:45-46)
தேவனுடைய
குமாரன் என்று அழைக்கப்பட்டார் (மத். 16:16; 27:40; 27:43; 27:54; சங். 2:6-7; ஏசா. 9:6-7; யோ. 1:34; 1:49; 3:16-18; 5:18-25; 6:69; 10:30; 10:36; 19:7; 20:31; 1யோ. 5:11-13)
தீர்க்கதரிசி
என்றும் தேவன் என்றும் என்றழைக்கப்பட்டார் (மத். 13:57, 16:14, ரோ. 9:5)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக