புதன், 31 ஜூலை, 2019

#310 - பழைய ஏற்பாட்டில் உள்ள சட்டங்களில் நாம் எதை பின்பற்ற வேண்டும்,

#310 - *பழைய ஏற்பாட்டில் உள்ள சட்டங்களில் நாம் எதை பின்பற்ற வேண்டும், எதை பின்பற்றக்கூடாது, எந்தெந்த சட்டங்கள் இப்போது நமக்குத் தேவையில்லை, பின்பு ஏன் நாம் பழைய ஏற்பாட்டை வைத்துள்ளோம் என்பதை கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்*.

*பதில்* :
பழைய ஏற்பாட்டில்
10பொிய கட்டளைகளும்
603 உபகட்டளைகளும் உள்ளது.

இதில்
365 செய்யக்கூடாது என்கிற கட்டளைகளும்.
248 செய்யவேண்டும் என்பவைகளும் உண்டு.

கிறிஸ்துவானவரின் சிலுவை மரணமானது இந்த மோசேயின் பிரமானத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. (ரோ 10:4)

அந்த நாளுக்கு பின் –
இஸ்ரவேலர் உட்பட நாம் யாருமே மோசேயின் கட்டளைக்கு உட்பட்டவர்கள் அல்ல. (எரே. 31:31, 1கொரி. 11:25, எபி. 8:13, 9:15, 12:24)

நியாயபிரமானம் இன்றும் வேண்டும் என்பவர்கள் சாபத்தை பெற்றுக்கொள்வார்கள் என்று வேதம் சொல்கிறது (கலா 3:10)

பழைய ஏற்பாட்டை இன்றும் / என்றும் நாம் வைத்துக்கொள்ள வேண்டும். படிப்பதற்காக / அறிந்து கொள்வதற்காக. கடைபிடிப்பதற்கல்ல (கலா 3:24)

இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. (1கொரி. 10:11)

இப்போது நாம் நியாபிரமானத்தையல்ல – கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும் – அவர் கட்டளையை பின்பற்ற வேண்டும் (எபே. 1:22-23, 4:15, 5:23; பிலி. 2:10-11; கொலோ 1:18, 2:10, 2:19)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக