#299 - *விக்கிரகத்திற்கு படைக்கும் உணவை, தவிர்க்க
முடியாத நேரத்தில் ஆவிக்குரிய நாம் அதை உண்ணலாமா?*
*பதில்* :
எந்த வகையான தவிர்க்க முடியாத நேரம் என்று நீங்கள்
தொிவிக்காததால், இரண்டு சூழ்நிலையாக நான் கருத்தில் கொண்டு பதிவிடுகிறேன்.
விக்கிரகம் என்பது ஒரு வெறும் கல் தான் – அதற்கு எந்த
வல்லமையும் கிறிஸ்தவனுக்கு எதிராக இல்லை - அவைகளுக்கு படைக்கப்பட்டவைகளைப்
புசிக்கிற விஷயத்தைப்பற்றி ஒன்றுமில்லையென்றும் அறியவேண்டும் (1கொரி 4:8)
அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து
அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன் (1கொரி 10:30)
*ஆனால் கவனமாய் சூழ்நிலைகளை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம்
உள்ளது*:
1-
*கிறிஸ்தவர் ஒருவர் கொடும் பசியாய் இருக்கும்
போது* :
*விக்கிரக கோவிலில் சிறிதளவு ஆகாரம்
கிடைக்கும் பட்சத்தில்*, வசனம் இப்படியாக நமக்கு பதிலளிக்கிறது.
ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம்
எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.
எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே
பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய
மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத்
துணிவுகொள்ளுமல்லவா?
பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.
இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள். 1கொரி 8:9-12
2-
*கிறிஸ்தவன் ஒருவன் கொடும்பசியால் இருக்கும் போது தனக்கு
கொடுக்கப்பட்ட / கிடைக்கபட்ட எப்படிப்பட்ட
உணவை குறித்து உள்ள வசனம்* :
கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம்
நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை.
பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு
அழைக்கும்போது, போக
உங்களுக்கு மனதிருந்தால்,
மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.
ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன்
உங்களுக்குச் சொன்னால்,
அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின்
நிறைவும் கர்த்தருடையது.
உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய
மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய
மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன? 1கொரி 10:26-29
*சாராம்சம்* :
பொதுவாக எந்த சாப்பாட்டை சாப்பிட்டாலும் எப்படி வயிறு
நிரம்புகிறதோ அது போலவே விக்கிரகத்திற்கு படைக்கபட்டதை சாப்பிட்டாலும் வயிறு
நிரம்பும்... கிறிஸ்தவனுக்கு இதனிமித்தம் வேறு எந்த பயனும் வினையும் ஆத்துமாவிற்கோ
சரீரத்திற்கோ ஏற்படுவதில்லை.
ஆனால் – அவ்வாறு படைக்கப்பட்டதை சாப்பிடும் போது மற்றவர்கள்
கவனித்தால் - அது நமக்கு பாவம். ஆகவே விலகியிருப்பது நமக்கும் மற்றவர்களுக்கும்
நல்லது.
அப் 15:28 ... விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு
செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள்
விலகியிருக்கவேண்டுமென்பதே.
ரோ 14:14 ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று
கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத்
தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்.
ரோ14:15 போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய்
நடக்கிறவனல்ல; அவனை
உன் போஜனத்தினாலே கெடுக்காதே,
கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
ரோ
14:20 போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப்
பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்;
ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும்.
ரோ 14:21 மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும்
செய்கிறதும், உன்
சகோதரன் இடறுகிறதற்காவது,
தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில்
ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.
1கொரி 10:19 இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான்
சொல்லுகிறேனோ?
1கொரி 10:20 அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே
பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்;
நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.
1கொரி 10:21 நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும்
பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய
போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.
1கொரி 10:22 நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம்
பலவான்களா?
1கொரி 10:24 ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய
பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.
1கொரி 10:28 ஆயினும் இது விக்கிரகங்களுக்குப்
படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின்
நிறைவும் கர்த்தருடையது.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக