கேள்வி :
பரிசுத்த
ஆவியானவரின் பெலன் (அபிஷேகம்) ஞானஸ்நானம் எடுப்பதால் கிடைக்கிற ஒரு காரியம் இல்லை.
அப் 1:4,5 இந்த அபிஷேகத்தை வரத்தை தனியாகத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்னவென்றால் ஞானஸ்நானம் பெற்றபின் அபிஷேகம் அப் 2:37,38
அபிஷேகம் பெற்றபின் ஞானஸ்நானம் அப் 10:44,47
இப்படி
தான் வேதம் சொல்கிறது.
இன்று நீங்கள் அனுப்பிய செய்தியை நான் படித்த போது, வேதத்தின் படி எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கிறேன். ((அந்த செய்தியை படிக்க இங்கே சொடுக்கவும்))
பதில் :
உங்கள்
கருத்திற்கு ரொம்ப நன்றி சிஸ்டர்.
கீழே நான் எழுதும் வரிகளை கவனிக்குமாரு தாழ்மையாய் கேட்கிறேன்:
அப் 1:3-5 அவர் (இயேசு) பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும்
(கவனிக்கவும்→) “அப்போஸ்தலருக்குத்“
தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை “அவர்களுடனே” பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே “அவர்களுக்குத்” தம்மை உயிரோடிருக்கிறவராகக்
காண்பித்தார்.
அன்றியும், அவர் “அவர்களுடனே” கூடிவந்திருக்கும்போது, “அவர்களை” நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; “நீங்கள்” சில நாளுக்குள்ளே “பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம்” பெறுவீர்கள்.
ஆகையால் “நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல்” என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் “நிறைவேறக் காத்திருங்கள்” என்று கட்டளையிட்டார்.
அன்றியும், அவர் “அவர்களுடனே” கூடிவந்திருக்கும்போது, “அவர்களை” நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; “நீங்கள்” சில நாளுக்குள்ளே “பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம்” பெறுவீர்கள்.
ஆகையால் “நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல்” என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் “நிறைவேறக் காத்திருங்கள்” என்று கட்டளையிட்டார்.
விளக்கம்:
அப்போஸ்தலர்
புத்தகம் 1 அத்தியாயம் 8ம் வசனம் வரைக்கும் கிறிஸ்து இயேசுவானவர் தம்முடைய 11 அப்போஸ்தலர்களுக்கு
நேரடியாய் சொன்ன கட்டளையை பார்க்கிறோம்.
அதாவது: பரிசுத்த ஆவியானவர் மூலமாக அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படும் என்றும், அது சில நாட்களுக்குள் நிறைவேறும் என்றும், அதை பெற்றுக்கொள்ள எருசலேமை விட்டு வெளியே போகாமல் அங்கேயே காத்து இருக்குமாறும் கட்டளை கொடுக்கப்பட்டது.
கவனிக்க வேண்டிய 3 காரியங்கள்:
- 1- அவர்களுக்கு
- 2- சில நாளைக்குள்
- 3- எருசலேமில்
இவை
மூன்றும் பென்டியோ காஸ்ட் என்று சொல்லப்படும் 50வது நாள் பண்டிகையிலே நிறைவேறியதை நீங்கள்
அறிந்ததே.
அதை தொடர்ந்து அப்போஸ்தலனாகிய பேதுரு, ஜனங்களை பார்த்து பேசிய தன்னுடைய முதல் பிரசங்கத்தில் அப் 2:38ல் பேதுரு அவர்களை (ஜனங்களை) நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது “பரிசுத்த ஆவியின் வரத்தைப்” பெறுவீர்கள். என்று சொல்கிறார்..
பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் என்பதற்கும் பரிசுத்த ஆவியானவரின் *அபிஷேகத்தை* பெறுவீர்கள் என்பதற்கும் – அதிக வித்தியாசம் உண்டு.
வரம் என்பது – Gift அல்லது அன்பளிப்பாக நாம் பெற்றுக்கொள்கிறோம்.
புதிய
ஏற்பாடு கிரேக்க பாஷையில் எழுதப்பட்டது.
இந்த வரம் என்கிற பதத்தை – கிரேக்க பாஷையில் – Dorea (டோரீயோ) என்று சொல்லப்படுகிறது. அதற்கான அர்த்தம் கிருபையாய் கொடுக்கப்படும் விலை மதிப்பு இல்லாத பரிசு அல்லது வரம் என்று பொருள்.
புதிய ஏற்பாட்டில் மொத்தம் 10 இடங்களில் இதை குறித்து படிக்க முடியும். அவைகள் : அப் 2:38; அப் 8:20; அப் 10:46; அப் 11:17; ரோமர் 5:15; ரோமர் 5:16; 2 கொரி 9:15; எபே 3:7; எபே 4:7; எபி 6:4
*உங்களுடைய 2வது சம்பவத்திற்கான விளக்கம்* :
முதன்முதலில்
யூதர் அல்லாத புறஜாதியார் மத்தியில் நடக்கும் சம்பவம் அப்10:44,47ல் சொல்லப்படுவது.
புறஜாதியார் மத்தியில் யூதர்கள் கலந்து செல்வது – நியாயபிரமானத்தின் படி தடுக்கப்பட்ட ஒன்று. அது அவர்களுக்கு (யூதர்களுக்கு) அசுத்தமான காரியம்.
ஆகவே தான் பேதுரு தான் அங்கு போக மாட்டேன் என்று மறுக்கும் போது – தேவன் வெளிபட்டு பேதுருவை போகுமாறு கட்டளை கொடுக்கிறார்.
ஞானஸ்நானம்
யூதருக்கு மாத்திரம் என்று அவர்கள் நினைத்து கொண்டு இருந்த காலம் (அப்10:47).
யூதர்கள் உயர்ந்தவர்கள் என்றும் நம்மை போல உள்ள புறஜாதியினர் எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்றும் பேதுருவும் அவரோடு கூட சென்றவர்கள் மனதில் இருந்த எண்ணம் எடுத்துப்போட ஏதுவாக கொர்நேலியு மற்றும் குடும்பத்தினர் மீது ஆவியானவர் “வரமாக” கொடுத்தருளப்பட்டார் (அப்10:46).
பரிசுத்த ஆவியானவர் “வரமாக” அவர்களுக்கும் – அதாவது தாழ்ந்தவர்கள் அசுத்தமானவர்கள் என்று அழைக்கப்பட்ட யூதரல்லாத நம்மைப்போல புறஜாதியினருக்கும் கொடுக்கப்பட்டதை கண்ட யூதர்கள் (பேதுருவும் கூட சென்றவர்களும்) உடனடியாக – அப் 10:46 பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் *பிரமித்தார்கள்*.
(10:47-48) அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு *ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான்*. அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் - புறஜாதிகளுக்கும் கொடுக்கப்பட வேண்டிய ஞானஸ்நானமானது எந்த தடையும் இல்லாமல் கொடுக்கப்பட்டதை வேதத்தில் பார்க்க முடிகிறது.
பரிசுத்த ஆவியானவர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவர்களுக்கு வரமாக கொடுக்கப்பட்டதையும் மேலே கொடுக்கப்பட்ட வசனங்களில் தெளிவாய் வாசிக்க முடிகிறது.
போதுமான அளவிற்கு விளக்கி இருக்கிறேன் என்று நம்புகிறேன். ஏதாவது சந்தேகம் இருப்பின் தயவு செய்து தெரிவிக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக