*தவறு செய்ய காரணம் தேடவேண்டாம்*
by : Eddy Joel Silsbee
இந்த புதிய நாளிலே உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்தவர்களுக்கு விசுவாசத்தின் வைராக்கியம் அனுதினமும் எப்படி இருக்கிறது ??
1-குடித்து, மகிழ்ச்சியோடு இருந்த வேளையிலும், “உரிமை” இருந்த போதும் போவாஸ், தன் அருகாமையில் வந்த ரூத்திடம் தவறு செய்யவில்லை (ரூத் 3:7)
2-“வாய்ப்பும் சகல சாதகங்களும்” இருந்த போதும் யோசேப்பு தவறு செய்யாமல் விபசாரத்தை எதிர்த்தார். அதோடு நில்லாமல், வெளியே ஓடிவிட்டார். (ஆதி. 39:12)
3-மீறினால் தண்டனை என்ற நிபந்தனையுடன், அந்நாட்டின் “ராஜாவே கட்டளையிட்டிருந்தும்” சிலைக்கு தலை வணங்க மறுத்த அந்த இளம் வாலிபர்கள். (தானியேல் 3:16-18)
ஆம்,
சூழ்நிலையை காரணம் காட்டி தவறு செய்ய தூண்டப்பட்டு விட்டோம் என்று சாக்கு சொல்ல கூடாது.
பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம்.... அதை தான் தேவன் எதிர்பார்க்கிறார். (1பேதுரு 1:15)
நேற்றைய கிறிஸ்தவனுக்கும் இன்றைய கிறிஸ்தவனுக்கும் ஒரு படியாவது முன்னேற்றம் கண்டு இன்னும் பெலமுள்ள விசுவாசத்தை நோக்கி நகருவோம். பெலவீனங்களை சாதகப்படுத்தக்கூடாது. விட்டு உதறி, விசுவாசத்தை நோக்கி ஓடவேண்டும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக