வியாழன், 25 மே, 2023

சலனத்தில் சபலம்

 

*சலனத்தில் சபலம்*
by : Eddy Joel Silsbee
 
சோதனையை சகிக்க பெலன் தந்த கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள்.
 
Temptation என்கிற வார்த்தைக்கு தமிழில்,
*சலனம்* என்றும் அர்த்தம்.
 
ஆனால் சோதனை என்றே நாம் பொதுவாக சொல்லிவிடுகிறோம்.
 
ஆசை வார்த்தைகளைக் கூறி,
இச்சைகளை தூண்டும்படிக்கு சூழ்நிலைகளை உருவாக்கி,
நமது இதயத்தை சாய்க்கும்படிக்கு
பிசாசு நம்மை சலனப்படுத்திப் பார்ப்பான்.
 
ஊராரும் இல்லை, உற்றத்தாரும் இல்லை, காட்டிக்கொடுக்க 3வது நபரும் இல்லை. கர்த்தரும் தன்னுடன் தான் இருக்கிறார். (ஆதி. 39:2)
 
அதிகாரமும் உள்ளது, ஒரு நாள் அல்ல பல நாட்கள் வாய்ப்பு வருகிறது (ஆதி. 39:10).  பிடித்து கண்டிக்க அருகே அவளது கணவனும் இல்லை, தன்னைவிட வேறு பெரிய மனிதனும் இல்லை – என் படுக்கைக்கு வா என்று போத்திபாரின் மனைவி அழைத்தபோது;
 
ஊருக்கு நல்லவனாக தன்னைக் காட்டிக்கொண்டு
இரகசிய உறவையும்
தன்னுடைய தனிமையையும்,
வாலிபத்தையும் அனுபவிக்க கிடைத்த
நல்ல வாய்ப்பை நழுவ விடாமல்
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அந்த கள்ளக்கணக்கிற்கு கைக்கொடாமல் – *தேவன் என்னை காண்கிறார் என்று யோசேப்பு விலகி ஓடினார்*. உன்னதமான இடத்தில் யோசேப்பு தேவனால் உயர்த்தப்பட்டார். ஆதி. 39:7-9, 41:41
 
ஆனால், ஆதி பெற்றோர்களான ஆதாமும் ஏவாளுமோ பார்வைக்கு அழகானதில் விழுந்து போனார்கள். ஆதி. 3:6
அனனியாவும் சப்பிராளும் பண லாபத்திற்கு வஞ்சிக்கப்பட்டு அதனுள் விழுந்து போனார்கள்.. அப். 5:3
 
எவ்வளவோ முயற்சித்தும், *இயேசுவிடமோ ந்த முயற்சி பலிக்கவில்லை* (மத். 4:3).
 
ஆசைக்காட்டப்படுவதால் நாம் தூண்டப்படுகிறோம். அதில் *விழுந்து விடாமல் நம்மை காத்து கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கிறது*.
 
தேவன் நமக்கு அனுமதித்ததையும், கொடுத்ததையும்;
நேர்த்தியாய் பாதுகாத்து, பத்திரமாக, சரியா இருக்கிறோமா என்று நம் *விசுவாசத்தை பரிசோதித்துப் பார்க்கப்படுவதுவே சோதனை*.
 
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 1தீமோ. 6:6
 
கவனமாய் செயல்படுவோம். தேவனுக்கு உத்தமமாய் நடந்துக்கொள்வோம். கொஞ்சத்திலே இவன் உண்மையாய் நடந்து கொண்டான்... ஆகவே இவனுக்கு இன்னும் கொஞ்சம் கூட்டிவழங்கலாம் என்று தேவன் நம்மை மேலும் ஆசீர்வதிப்பார்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
 
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
 
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*
 
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக