#1160 - *எங்கள் கிராமத்தில் ஒரு சிலர் கிறிஸ்தவர்களாக இருந்தும் (ஊழியர்கள், விசுவாசிகள்) நிலம் / சொத்து ஆசை பிடித்தவர்களாய் பிறருடைய நிலங்களை தங்களுடைய பெயரில் மாற்றி அநீதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.* இப்படிப்பட்டவர்களால் தேவ சாட்சி கெட்டுபோகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு தேவன் தரும் அறிவுரை, தண்டனை என்ன?
*பதில்* : தனக்கானதை அல்லது தனக்குள்ளதே போதுமென்கிற மனம் இருக்கவேண்டியது அவசியம். எபி. 13:5
இன்னும் வேண்டும் அல்லது இருப்பது போதாது என்னும் உள்ளம் கொண்டவர்கள் அக்கினியை போன்றவர்கள். (நீதி. 30:16) வேதத்தில் பெரும்பாலும் அக்கினி என்பது அழிவை குறிப்பதாகும் (வெளி. 20:9). மற்றவர்களுடயதையும் அழிக்காமல் அந்த எண்ணம் ஓயாது!!
தான் சம்பாதிப்பது அல்லது தனக்குறியது போதவில்லை என்ற எண்ணம் மற்றவருக்கு இடுக்கண் செய்யவும் பொய் குற்றம் சாட்டவும் வைக்கும். லூக். 3:14
பணஆசையில்லாமல்; “இருப்பது” போதுமென்றிருந்தால் நான் உன்னை கைவிடுவதில்லையென்று தேவன் வாக்களிக்கிறார். எபி. 13:5
போதுமென்கிற மனதுடனுள்ள தேவபக்தியே மிகுந்த லாபம். 1தீமோ. 6:6
ஊழியத்திற்கென்று பிரத்யேகமாக தங்களை ஒப்பிவித்தவர்களானாலும்,
உலக வேலையை செய்துக்கொண்டு ஊழியம் செய்பவர்களானாலும்,
உலக வேலையில் மாத்திரம் இருக்கும் கிறிஸ்தவர்களானாலும் – சத்தியத்தின்படி கிறிஸ்தவர்கள் அனைவருமே தேவனுக்கென்று எப்போதும் எச்சூழ்நிலையிலும் தேவனுடைய ஊழியர்களாயும் சகல இடத்திலும் தேவனுக்கு சாட்சியாயும் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். 1பேதுரு 2:9, 1கொரி. 10:31
அவசியத்தை கடந்து சேர்க்கவேண்டும் என்ற ஆசை தீமையை கொண்டு வரும். அதனிமித்தம் தேவன் மீதுள்ள பற்று கட்டாயம் குறையும். வாழ்வில் பல வேதனைகளை அடைவது நிச்சயம் (1தீமோ. 6:10).
*தனக்குறியவைகளை விட்டு பிறனுக்குரியதை அபகரிப்பவர்கள்*:
1-தன் சொந்த சகோதனையே கொலை செய்த காயீனுக்கும்,
2-சமுதாயத்தையே தவறான பாதைக்கு நடத்தின பிலேயாமிற்கும்,
3-தேவனுடைய மனிதர்கள் மீது பொறாமை கொண்டு தான் கெட்டதுமல்லாமல் மேலும் 250பேரையும் நாசமாக்கின கோராகுவிற்கும் ஒத்தவர்கள் என்கிறது வேதம். யூதா 1:11, எண். 26:9-10
அநீதியை விட்டு மனந்திரும்புவது அவசியம். இல்லையெனில் பரலோக பாதை மாறிவிடும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +971502117410 (துபாய்) / +918144776229 (இந்தியா)
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக