*ஜனங்களை குஷிப்படுத்த சபை என்ற உடற்பயிற்சி கூடம்*
by : Eddy Joel Silsbee
சிலுவையின் மரணபரியந்தம் பரம தகப்பனுக்கு உண்மையாயிருந்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.
ஜனங்களை சமாதானபடுத்தும்படிக்கு பிலாத்து,
*இயேசு கிறிஸ்துவையே சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தான்* மாற்கு 15:15
இப்போதும் அவ்வண்ணமே நடக்கிறது...
சபையாரை குஷிபடுத்தும்படியாக,
*“இயேசு கிறிஸ்துவையே சிலுவையில் அறைந்து விடுகிறார்கள்“*
தொழுகை என்ற பெயரில்
பரவசமும், உணர்ச்சி பூரிப்பும், நடனமும், கூச்சலும், ஊளையிடுவதும், குதித்தலும் போன்ற சரீர முயற்சியனைத்தும்;
ஆத்துமாவிற்கல்ல மாறாக தூக்கலக்கத்தை போக்கி சரீரத்திற்கு உற்சாகத்தையும் பெலனையும் சவுக்கியத்தையும் உடற்பயிற்சியையும் தரும். கொலோ. 2:23
சரீரம் உற்சாகமடைய உடற்பயிற்சி கூடமே சரியான இடம்.
தேவனுக்கு பிரியமானதோ:
அவர் வார்த்தைக்கு கீழ்படிதலும் பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை சேவிப்பவர்களுமே !!
இரட்சிப்பிற்கு கீழ்படிதலே வழி. ஏசா. 66:2, 5; ஏசா 1:12,15
சீழ் பிதுக்கப்பட்டு மருந்து கட்டினாலன்றி எந்தப் புண்ணும் எப்படி ஆறாதோ;
அது போலவே மனந்திரும்பாமலும் சத்தியத்தை கேட்காமலும், விசுவாசிக்காமலும் ஞானஸ்நானம் எடுக்காமலும் “இரட்சிக்கப்பட்டுவிட்டாய்” என்பது அபத்தம் !! ஏசா. 1:5-6, மாற்கு 16:16, அப். 2:37-38, ரோ. 6:1-6, அப். 22:16
மூன்று தடவை “இயேசுவின் இரத்தம் ஜெயம்” என்றதும் இரட்சிக்கப்பட்டுவிட்டாய் என்பதும்;
சத்தியத்தின்படி ஞானஸ்நானம் எடுக்காமலேயே இரட்சிக்கப்பட்டதாக நம்பிக்கொண்டு இருப்பதும் கிளி ஜோசியக்காரனின் ஜோசியம் !! தீத்து 3:5-7, எபே. 5:26, 1பேதுரு 1:22-23, எபி. 10:22
* வசன குறிப்புகளை வேதத்தை எடுத்து வாசித்துப்பார்க்கவும் *
கீழ்படிந்தால் தேவன் சகலவற்றையும் நன்மையாக மாற்றுவார் !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/SNs5Q-D-FUo
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக