*கட்டிடங்கள் சபை அல்ல*
by : Eddy Joel Silsbee
சபைக்கு தலையாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
புதிய பிரமாண காலத்தில் இருக்கிறோம்.
மணி அடித்து அழைக்கும் கட்டிடமோ,
கொட்டு அடித்து கூப்பிடும் கூடாரமோ,
அலங்கரித்து உயர்ந்த வடிவமைப்புடன் கரையோரத்திலிருக்கும் கட்டிடத்தையோ, *“சபை” என்று வேதம் சொல்லவில்லை*.
அவையெல்லாம் *கட்டிடங்கள்* தான்.
கடவுள் அதனுள்ளே தங்கி இருப்பதில்லை !! (அப். 17:24)
பிரசங்க மேடை அருகே நின்று ஜெபித்தால் தேவனுடைய காதுகளில் சீக்கிரமாக விழுந்து விடுவது போல நம்பிக்கொண்டு இருப்பது 2,000 வருடங்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டு போனது.
இன்னமும் அதையே நம்பிக்கொண்டு நாட்களை வீணடிக்க வேண்டாம். எங்கும் தொழுது கொள்ளும் காலத்தில் நாம் வாழுகிறோம். யோ. 4:21
இரட்சிக்கப்பட்ட நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம். 1கொரி. 3:16
அவர் வியாபித்து இருப்பது நம் சரீரத்தில் மற்றும் அவருடைய கட்டளையின்படியான கிறிஸ்தவர்கள் ஒன்று கூடும் இடத்தில் அவர் பிரசன்னாமாகிறவர். மத். 18:20
இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார் என்று அப். 2:47ல் வாசிக்கிறோம். எக்ளீஷியா என்ற கிரேக்க வார்த்தைக்கு சபை என்ற தமிழ் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு “பிரித்தெடுத்தல்” என்பது தமிழ் அர்த்தம்.
உலகத்திலிருந்து பிரித்தெடுத்து தனது சரீரத்தில் ஓர் அங்கமாக்கினார். ஆம், இரட்சிக்கப்படுகிறவர்கள் *கர்த்தரின் சரீரத்தில்* அங்கங்களாக சேர்க்கப்பட்டு வருகிறோம். எபே. 4:16, 25, 5:30
விசுவாசமுள்ளவர்களாகி *கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்* என்று அப். 5:14 சொல்கிறது.
ஒரே சபை ! ஒரே ஞானஸ்நானம் ! என்ற வார்த்தைகளை கேட்டு எல்லாம் ஓகே ஓகே என்று தலையாட்டிக்கொண்டாலும், மேடை வியாபாரிகளின் வார்த்தை ஜாலத்திற்கு விழுந்து, தண்ணீர் ஞானஸ்நானம் மாத்திரம் போதாது இன்னுமொரு ஞானஸ்நானமும் பெற காத்து, அக்கினியால் அழிவைத் தேடிக்கொள்ளக்கூடாது. மத். 3:11-12
காலை ஒரு சபை, மாலை ஒரு சபை, குடும்ப சபை, ஆதி சபை, ஆவிக்குரிய சபை, ஆவியில்லாத சபை என்று பட்டியல் நீளுகிறது…
எவ்வளவு பரிதாபகரமான நிலமையில் கிறிஸ்தவம் என்ற பெயரில் கிறிஸ்தவ மதம் ??
மதத்தை விட்டு கிறிஸ்தவ மார்க்கத்திற்கு திரும்புவது அவசியம்.
சபை என்ற பெயரிலுள்ள *அத்தனை பிரிவுகளுக்கும்* மனிதர்களே Founder என்பதை நினைவில் கொள்ளவும்!
நீங்கள் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமாய் இருக்கிறீர்களா அல்லது மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட மதங்களில் பிரிவுகளில் அங்கமாய் இருக்கிறீர்களா என்பதை ஊர்ஜித படுத்திக்கொள்ளவும். (ரோ. 16:16)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக